ஈரான் போர் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்த வண்ணமே இருக்கிறது. மூன்றாவது வாரமாக இரு தரப்பும் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருக்கின்றன. ஈரான் போர்காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் வெளியே வர முடியாமல் அங்கேயே சிக்கி தவிக்கின்றன. இது உலகம் முழுவதுமே கச்சா எண்ணெய் சப்ளையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போர் தொடங்கிய முதல் ஒரு வார காலமாக இதன் தாக்கத்தை உலக நாடுகள் பெரிய அளவில் உணரவில்லை. ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை என பல்வேறு நாடுகளிலும் பிரச்சினை தொடங்கியது. இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மூடப்பட்டன. அதுமட்டுமில்லாமல் வீட்டு உபயோக சிலிண்டருக்கும் கூட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. நிறுவனங்களுக்கும் உற்பத்தி ஆலைகளுக்கும் எல்பிஜி விநியோகம் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தான், இலங்கையில் எல்லாம் நிலைமை இன்னும் மோசம். தங்கள் அனுமதி இல்லாமல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தால் அந்த கப்பல்களை அழிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் வளைகுடா பகுதியிலேயே தேக்கம் அடைந்துள்ளன. இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் புதிய யோசனையை முன்வைத்தார். அதாவது ஹார்முஸ் ஜலசந்தியை சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து வர வேண்டும் என்றால் நட்பு நாடுகள் அமெரிக்காவுடன் கூட்டணி அமைத்து தங்களுடைய போர்க்கப்பல்களை கொண்டு அங்கே பாதுகாப்பு தர வேண்டும் என கூறினார்.
இதற்காக நாம் அனைவரும் ஒரு மெகா கூட்டணி அமைக்கலாம் என பல்வேறு நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்காவுக்கு எதுவுமே வருவதில்லை ஆனால் சீனா போன்ற நாடுகளுக்கு 90% கச்சா எண்ணெய் இந்த வழியே தான் வர வேண்டும். எனவே நட்பு நாடுகளும், இந்த ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்து நம்பி இருக்கும் நாடுகளும் தங்களின் போர் கப்பலை அனுப்பி பாதுகாப்பு வழங்கலாம் என தெரிவித்தார்.

போர் கப்பல்கள் மூலம் இங்கே பாதுகாப்பு அளித்து சரக்கு கப்பல்கள் போக்குவரத்தை சரி செய்யலாம் என அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த அழைப்பை உலக நாடுகள் நிராகரித்து வருகின்றன. அமெரிக்காவின் கூட்டாளி என அழைக்கப்படும் பல்வேறு நாடுகளுமே இந்த திட்டத்தை ஏற்க மறுத்து இருக்கின்றன.
ஆஸ்திரேலியா அரசு இந்த திட்டத்துடன் நாங்கள் ஒத்துப் போகவில்லை என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது. அதேபோல ஜப்பானும் இந்த அழைப்பை ஏற்க போவதில்லை என கூறிவிட்டது. இந்த சூழலில் தற்போது பிரிட்டன் அரசாங்கமும் இந்த திட்டத்தை ஏற்க மறுத்துள்ளது. அந்த வகையில் ட்ரம்பின் அழைப்பை ஆஸ்திரேலியா ,ஜப்பான் ,பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதுவரை நிராகரித்துள்ளன.
சீனா இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை ஆனால் போரை நிறுத்த வேண்டும் என மட்டும் குரல் கொடுத்து வருகிறது. அமெரிக்கா , தங்களிடம் கலந்தாலோசிக்காமல் தானே ஈரான் போரை தொடுத்தது அப்படி இருக்கையில் இப்போது மட்டும் போர் கப்பல்களை கோரினால் அனுப்ப முடியுமா என நட்பு நாடுகள் பலவும் கேள்வி எழுப்புகின்றனவாம். ஆனால் டிரம்போ இந்த அழைப்பை ஏற்காத நாடுகளை நான் நினைவில் வைத்துக் கொள்வேன் என பகிரங்கமாக மிரட்டி இருக்கிறார்.
More From GoodReturns

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications