கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜூன் காலாண்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின் மூலம் ரெசிஷனுக்குத் தள்ளப்பட்ட பிரிட்டன் மீண்டும் ரெசிஷனுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்கப் பாங்க ஆப் இங்கிலாந்து சுமார் 150 பில்லியன் பவுண்ட் நிதியை பிரிட்டன் வர்த்தகச் சந்தைக்குள் செலுத்த முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் தனிநாடாகப் பிரிந்த நாள் முதல் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் அந்நாட்டு அரசும் பல்வேறு நிர்வாகப் பிரச்சனை சந்தித்து வரும் வேளையில் கொரோனா பாதிப்பு பிரிட்டன் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
வட்டி விகிதம்
பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ள நிலையில் அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.1 சதவீதமாகவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இதோடு வர்த்தகச் சந்தையை வலிமைப்படுத்தவும் பன்னாட்டு முதலீடுகளைக் காப்பாற்றவும் அரசு பத்திரத்தை வாங்கும் அளவீட்டை 875 பில்லியன் பவுண்ட் அளவிற்கு உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
நுகர்வோர் சந்தை
பிரிட்டனில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் அதைக் கட்டுப்படுத்த அதிகளவிலான கட்டுப்பாடுகள் அமலாக்கம் செய்ய உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் பிரிட்டன் நாட்டின் நுகர்வோர் வர்த்தகச் சந்தையைப் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4வது காலாண்டு
பிரிட்டன் பொருளாதாரம் மோசமான இருக்கும் நிலையில் நாட்டின் நுகர்வோர் சந்தையைப் பாதிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கும் காரணத்தால் 2020ஆம் ஆண்டின் 4வது காலாண்டிலும் பிரிட்டன் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்லும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2
வியாழக்கிழமை பிரிட்டன் அரசு மீண்டும் முழுமையான லாக்டவுன் அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 2 வரையில் உணவகங்கள், பார் ஆகியவை மூடப்பட உள்ளது. மேலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை சேவைகள் கிடைப்பதிலும் பாதிப்பும் ஏற்படும்.
புதன்கிழமை புதிதாக 25,177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரிட்டன் அரசு இந்த லாக்டவுன்-ஐ அறிவித்துள்ளது.
80 சதவீத சம்பளம்
இந்த லாக்டவுன் காலத்தில் வர்த்தகங்கள் மூடப்பட்டத்தால் பிரிட்டன் அரசு ஊழியர்களுக்கு 80 சதவீத சம்பளத்தைக் கொடுக்கும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்த நிலையில், இத்திட்டம் தற்போது மார்ச் 2021 வரையில் நீட்டிக்கப்பட உள்ளது எனப் பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
கணிப்புகள்
பிரிட்டன் மத்திய வங்கிகள் கணிப்பின் படி 4வது காலாண்டில் பிரிட்டன் பொருளாதாரம் 2 சதவீதம் வரையில் சரியும் என்றும், 2020ஆம் ஆண்டில் மொத்தமாக 11 சதவீதம் வரையில் சரியும் எனக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications