இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், அரசியல் பிரச்சனைக்கு மத்தியிலும் மோசமான நிலையை அந்நாட்டு மக்களும், வர்த்தக சந்தையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அந்நாட்டின் வர்த்தகத்தை தொடர்வது பெரும் சிக்கல் இருப்பது மட்டும் அல்லாமல் வருமானம் பெரிய அளவில் சரிந்து வருகிறது.
இப்படியிருக்கையில் பாகிஸ்தான் நாட்டில் சுமார் 125 வருடமாக பல கூட்டணியில் பல பெயரில் இயங்கி வந்த பிரிட்டன் நாட்டின் Shell பெட்ரோலியம் நிறுவனம் அந்நாட்டு வர்த்தகத்திற்காக உருவாக்க நிறுவனத்தில் சுமார் 77 சதவீத பங்குகளை வைத்துள்ளது, இந்த பங்குகளை மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நிறுவனத்திற்கு பங்குகளை விற்பனை செய்ய ஜூன் 14 ஆம் தேதி கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக இன்று பாகிஸ்தான் நாட்டின் பங்குச்சந்தைக்கு சமர்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. Shell Pakistan Limited நிறுவனம் பாகிஸ்தான் நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அரசு கடந்த சில வருடமாக கச்சா எண்ணெய் இறக்குமதியிலும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலையை தாறுமாறாக உயர்ந்தி வருகிறது. இதனால் மக்கள் எரிபொருள் பயன்பாட்டை பெரிய அளவில் குறைத்துள்ளனர், இதில் வருவாய் பாதிப்பை எதிர்கொண்ட Shell Pakistan Limited தனது 77.42 சதவீத பங்கு இருப்பையும், பாக் அரபு பைப்லைன் கம்பெனியில் இருக்கும் 26 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சுமார் 125 வருடமாக இருக்கும் shell நிறுவனம் வெளியேற முக்கிய காரணம் பாகிஸ்தான் ராணுவம், பிரதமர் ஷெபாஷ் ஷரீப், நிதி அமைச்சர் இஷ்க் தார் ஆகியோர் தான் காரணம், பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் இவர்கள் தான் காரணம் என பாகிஸ்தான் மக்கள் டிவிட்டரில் காரசாரமான கருத்துக்களை பதிவிடுகின்றனர்.
இந்த நிலையில் சனா கான் என்பவர் டிவிட்டரில் இத்தகைய செய்தியை கேட்ட மிகவும் வருத்தமாக உள்ளது, தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூடிவதை பார்த்து வருகிறோம். தினமும் 100க் கணக்கான மக்கள் தங்களுடைய வேலைவாய்ப்பை இழக்கின்றனர். இது எங்கு போய் முடியுமோ..? என புலம்பி டிவீட் செய்துள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications