பிரிட்டன் தற்போது ராணி எலிசபெத் மறைவின் சோகத்தில் இருந்தாலும் அந்நாட்டின் பிரதமராக Liz Truss தேர்வு செய்யப்பட்டு உள்ளதும், இதேவேளையில் முன்னாள் நிதியமைச்சரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக்-ன் தோல்வி பெரும் பாதிப்பை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கிண்டல் செய்யும் வகையிலும் அதேபோல் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் CV Library என்னும் வேலைவாய்ப்பு தேடல் நிறுவனம் ரிஷி சுனக்-ஐ பகிரங்கமாகக் கிண்டல் செய்யும் வகையில் விளம்பரம் செய்துள்ளது. இது இந்த விளம்பரம் இந்தியர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் பிரிட்டன் நாட்டவர்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளது.
அப்படி என்ன விளம்பரம் செய்யப்பட்டது தெரியுமா..?
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டின் பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்தியில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகிய நிலையில், இப்பதவிக்குப் போட்டிப்படோ பலர் முன்வந்தனர்.
பிரதமர் Liz Truss
இதில் கடைசிக்கட்டத்திற்கு முன்னேறியதில் ரிஷி சுனக் மற்றும் Liz Truss ஆகியோர் தான். கடைசி வாக்குப்பதிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷி சுனக் தோல்வியைச் சந்தித்த காரணத்தால் Liz Truss பிரிட்டன் நாட்டின் பிரதமர் ஆனார்.
ரிஷி சுனக்
இந்த நிலையில் CV Library என்னும் நிறுவனம் பிரிட்டன் நாட்டின் முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனம் முக்கியப் பகுதிகளில் "Didn't get the job? We've got jobs for everyone என்ற வாசகத்துடன் ரிஷி சுனக் புகைப்படத்துடன் விளம்பரம் செய்தது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா..? அனைவருக்குமான வேலைவாய்ப்பு எங்களிடம் உள்ளது.? என்று பிரதமர் போட்டியில் தோல்வியுற்றதைக் கிண்டல் செய்யும் விதமாக விளம்பரம் செய்துள்ளது.
டிரெண்டிங்
இந்தப் புகைப்படம் தான் தற்போது பிரிட்டன் நாட்டைத் தாண்டி உலகளவில் டிரெண்டாகி வருவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான விமர்சனங்களையும், அதேவேளையில் வெகுமதிகளையும் சம்பாதித்து வருகிறது. இதில் ஒருவர் இதுபோன்று விளம்பரம் செய்ய ரிஷி சுனக் அனுமதி பெறப்பட்டதாக என்று கேள்வி கேட்டு உள்ளார்.
CV Library நிறுவனம்
CV Library நிறுவனம் இதுபோன்று சர்ச்சையான விளம்பரங்களைச் செய்வது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பு ஜூலை மாதம் போரிஸ் ஜான்சான் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் போது இதே CV Library நிறுவனம் எப்போது புதிதாக ஒரு விஷயத்தைத் துவங்குவதற்கு ஒரு உற்சாகம் இருக்கும். இப்புதிய துவக்கத்திற்காக நீங்கள் தேடலைத் தொடங்கும் போதெல்லாம் உங்களுக்காக அற்புதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
ரிஷி சுனக் - நாராயண மூர்த்தி
2015 முதல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இருக்கும் ரிஷி சுனக் குறைந்த காலகட்டத்திலேயே போரீஸ் ஜான்சனிடம் நற்பெயரைப் பெற்ற காரணத்தால் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனர் நாரணயமூர்த்தியின் ஓரே மகளான அக்ஷதா மூர்த்தியின் கணவர் ஆவார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications