சவுத் வேல்ஸ்: இன்றெல்லாம் ஃபுட் ரிவ்யூஸ் என்று சொல்லப்படுகிற பல்வேறு வகையான உணவுகளை ருசித்து கருத்துகளை வழங்கும் வீடியோக்கள் இணையதளங்களில் அதிகம் பார்க்கப்படுகிறது. இதைப் பார்க்கும் மக்களும், இதே போல் ஹோட்டல்களுக்கு சென்று பல்வேறு வகையான உணவுகளை ருசிக்க வேண்டும் என்று எண்ணம் கொள்கின்றனர்.
சிலர் 100 முதல் 200 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்து குறிப்பிட்ட ஹோட்டல்களில் உணவுகளை உண்பதற்காக செல்கின்றனர். இதிலிருந்து சாப்பாட்டிற்காக எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போகும் மக்கள் அதிகரித்துள்ளனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். இதன் அடுத்த கட்டமாக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் 5 ஸ்டார் உணவகங்களுக்கு சென்று உணவுகளை ருசித்துவிட்டு பணம் தராமல் ஏமாற்றி வெளியேறி உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு சென்று சுமார் $ 1200 டாலர் மதிப்பிலான பல்வேறு வகையான உணவுகளை ருசித்து விட்டு, பில் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ. 1 லட்ச ரூபாய் ஆகும்.
39 வயதான ஆன் மெக்டொனக் மற்றும் அவரது கணவரான பெர்னார்ட் மெக்டொனக் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தம்பதியினர் பெரிய உணவகங்களுக்கு சென்று உண்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். மேலும் அவர்கள் சாப்பிட்ட ஹோட்டல்களின் ஓனர்கள் போலீசில் இவர்களைப் பற்றி புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை அவசர நிலையாக பார்க்காததால், தம்பதியினர் தொடர்ந்து தப்பித்துக் கொண்டே இருந்துள்ளனர்.
ஹோட்டல் ஓனர்கள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி ஃபுட்டேஜ்கள் மற்றும் பிற விவரங்களைக் கொண்டு, இந்த தம்பதியினரை போலீசார் தேட துவங்கியுள்ளனர். அதன் பிறகு ஒரு வழியாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த தம்பதி குடும்பமாக சென்று 5 ஸ்டார் ஹோட்டல்களில் விலை உயர்ந்த உணவுகளை ருசித்து விட்டு பில் செலுத்தாமல் வந்தது தெரியவந்துள்ளது.
தம்பதியினர் வசிக்கும் பகுதியில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள அனைத்து ஹோட்டல்களுக்கும் சென்று விலை உயர்ந்த உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளனர்.
இந்த தம்பதியினர் குறித்து கூறிய போலீசார், இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஏமாற்றி விலை உயர்ந்த உணவுகளை உண்டு வந்துள்ளனர். குறிப்பாக ஆன் மெக்டொனக் டெபிட் கார்டு மூலம் பில் செலுத்துவதாகக் கூறிவிட்டு பில் டிக்லைன், ஆனதும் வேறு கார்டை எடுக்க செல்வதாக கூறி வெளியே சென்று அப்படியே காரில் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும், இதுபோன்ற ஏமாற்றுத்தனத்தை போலீஸ் கண்டுபிடிக்காமல் இருக்க ஹோட்டல்களில் ரூம் எடுக்கும் போது போலியான நம்பரை கொண்டு முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications