பிரிட்டன் நாட்டின் துணைப் பிரதமரான டொமினிக் ராப் வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். Dominic Raab மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் சில முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், Dominic Raab தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரிட்டன் நாட்டின் ஆட்சியில் இருக்கும் Conservative party-க்கு இத்தகைய குற்றச்சாட்டுகளும், குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆன பின்பு சத்தமில்லாமல் அமைச்சர் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வது வழக்கம் தான்.

டொமினிக் ராப் தற்போது பிரிட்டன் நாட்டின் துணைப் பிரதமராகவும், நீதித்துறை செயலாளராகவும் உள்ளார். இவர் முன்பு பிரிட்டன் நாட்டின் வெளியுறவுச் செயலாளராகவும், பிரெக்சிட் செயலாளராகவும் பணிபுரிந்தபோது, ஊழியர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டதும், Bully செய்ததும் இந்த துஷ்பிரயோகம் செய்ததாக பிரதமர் ரிஷி சுனக்-கிற்கு வந்த எட்டு முறை புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் வந்த அடுத்த நாளே பிரிட்டன் நாட்டின் துணைப் பிரதமரான டொமினிக் ராப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டொமினிக் ராப்-க்கு 49 வயதாகிறது. அவர் தனது ஊழியர்களை இழிவுபடுத்தியதாக புகார் வந்துள்ளதை மறுத்துள்ளார், மேலும் அவர் எப்போதும் ப்ரொபஷனல்-ஆக மட்டுமே நடந்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் கொடுமைப்படுத்துதல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் ராஜினாமா செய்வதாகக் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து பிரதமர் ரிஷி சுனக்-கிற்கு வந்த எட்டு முறை புகார்கள் அடிப்படையில் செய்யப்பட்ட தனிப்பட்ட விசாரணையில் டொமினிக் ராப்-க்கு எதிராக சக அரசு ஊழியர்கறை கொடுமைப்படுத்தியதும், இழிவுப்படுத்தியதற்கு இரண்டு புகார் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை மறுத்த டொமினிக் ராப் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
டொமினிக் ராப் சமர்ப்பித்துள்ள ராஜினாமா கடிதத்தில் தற்போதை விசாரணையில் கண்டுபிடித்தவை அனைத்தும் போலியானவை என்று குறிப்பாட்டார். இந்த விசாரணை ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்ததுள்ளது என்றும் கூறினார். ஆனால் தான் உறுதியளித்த நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டார் பிரிட்டன் நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரான டொமினிக் ராப்.
2022 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் பிரிட்டன் அமைச்சகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த சர் கவின் வில்லியம்சன், தனது சக கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் மற்றும் அரசு ஊழியர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதுகுறித்த விசாரணை நடந்து வரும் நிலையிலேயே பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல் போரிஸ் ஜான்சன் ஆட்சி காலத்தில் பிரிட்டன் அரசின் துணை தலைமை விப் மற்றும் வீட்டுச்சேவைத் துறையின் கருவூல தலைவரான கிறிஸ் பின்சர் குடிபோதையில் இரண்டு ஆண்களைத் தவறான இடத்தில் தொட்டதாக புகார் வைக்கப்பட்து. கிறிஸ் பின்சர் போரிஸ் ஜான்சன்-க்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் இந்த புகாரை சரியாக விசாரிக்காமல் இருந்த காரணத்தால் தான் ரிட்டன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் அளவுக்கு அப்போது பிரச்சனை வெடித்தது.
இதோடு கொரோனா தொற்றுக் காலத்தில் பிரிட்டன் முழுவதும் லாக்டவுனில் மூழ்கியிருக்கும் போது போரிஸ் ஜான்சன் மற்றும் அவருடைய சகாக்கள் (பிரதமர் வீட்டில் சரக்கு பார்ட்டி வைத்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் போரிஸ் ஜான்சன் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் பெரும்பாலானோர் அவர்களுடைய அலுவலகத்தில் மது அருந்தும் வழக்கத்தைக் கொண்டு உள்ளனர் என்பது playgate scandal என்ற பெயரில் பிரிட்டன் அரசியலை புரட்டிப்போட்டது மறக்க முடியாது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications