பிரிட்டன் பொருளாதாரம் கொரோனா பாதிப்பால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக 2வது முறை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள பிரிட்டன் அரசு கொரோனா பாதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதிகளவிலான நிதி சுமையை எதிர்கொண்டுள்ளது. இதைச் சமாளிக்கப் பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் முக்கியமான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் பிரிட்டன் பொருளாதாரம் தற்போது 300 வருடத்தில் மிகவும் மோசமான பொருளாதாரச் சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ள காரணத்தால் கடுமையான நிதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டன் தள்ளப்பட்டு உள்ளது.
1709ஆம் ஆண்டு
கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ள பிரிட்டன் பொருளாதாரம் இந்த ஆண்டு -11 சதவீதம் அளவிலான பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த -11 சதவீத பொருளாதார வீழ்ச்சியைப் பிரிட்டன் 1790ஆம் ஆண்டு ஸ்பானிஷ் போரின் போது பிரிட்டன் பொருளாதாரம் எதிர்கொண்ட மோசமான நிலையாகும்.
செலவுகள் குறைப்பு
இந்த 300 வருட மோசமான வீழ்ச்சியில் இருந்து பிரிட்டன் பொருளாதாரம் மீண்டு வர வேண்டும் என ரிஷி சுனக் தலைமையில் செலவுகள் கட்டுப்படுத்தும் முக்கியமான முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இதற்குப் பல தரப்புகள் கடுமையான விமர்சனம் வைத்தாலும், நாட்டின் நிதி நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செலவுகளை அதிகளவில் குறைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கட்டுமானம்
இதேபோல் அதிகளவிலான வேலைவாய்ப்புகளைக் குறுகிய காலகட்டத்திற்கு உருவாக்க வேண்டும் எனப் பல கட்டுமான திட்டங்களைப் பிரிட்டன் முழுவதும் கொண்டு வர முடிவு செய்துள்ளார் ரிஷி சுனக்.
இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவது மட்டும் அல்லாமல், குறைவான சம்பளத்தில் பணியாற்றும் பல கோடி பிரிட்டன் மக்களின் வருமானம் அதிகரிக்கும்.
ரிஷி சுனக்
இதுகுறித்து பிரிட்டன் நிதியமைச்சர் கூறுகையில் பிரிட்டன் தற்போது Economic Emergency-யில் உள்ளது நுழைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆனாலும் மக்களின் உயிரும், வாழ்வாதாரம் மட்டுமே தற்போது முதலும் முக்கிய இலக்காக உள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து விதமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
19% ஜிடிபி
இந்தக் கொரோனா காலத்தில் பிரிட்டன் அரசின் கடன் அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டின் முடிவிற்குள் பிரிட்டன் நாட்டின் கடன் அளவு 526 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து கடன் அளவு நாட்டின் 19 சதவீத ஜிடிபி அளவிற்கு உயரும் எனத் தெரிவித்துள்ளார் ரிஷி சுனக்.
சம்பள உயர்வு
செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பிரிட்டன் அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றும் சுகாதாரத் துறை அல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சம்பள உயர்வு
செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பிரிட்டன் அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றும் சுகாதாரத் துறை அல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications