மாட்டிக்கொண்டது பிரிட்டன்.. உண்மையை உடைத்த ரிஷி சுனக் அரசு..! #Recession

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளில் மக்கள் எப்போது ரெசிஷன் வரும் என்று அச்சத்தில் இருக்கும் போது பல நாடுகளின் பொருளாதாரமும், வளர்ச்சி அளவீடுகளும் பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளது.

ஆனாலும் எந்தொரு நாடும் இதுவரையில் ரெசிஷன் குறித்து வாயை திறக்காமல் இருக்கும் போது பிரிட்டன் நாட்டின் ரிஷி சுனக் அரசு உண்மையை உடைத்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன் நிதியமைச்சர் முக்கியமான ஒரு விஷயத்தைத் தெரிவித்துள்ளார், இந்த அறிவிப்பால் பிரிட்டன் நாட்டு மக்கள் மட்டும் உலக நாடுகளிலும் மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.

 பணக்காரர்களுக்கு செக் வைத்த ரிஷி சுனக்.. பிரிட்டன் மக்களை கவர்ந்த புதிய பிரதமர்..! பணக்காரர்களுக்கு செக் வைத்த ரிஷி சுனக்.. பிரிட்டன் மக்களை கவர்ந்த புதிய பிரதமர்..!

ரெசிஷன்

ரெசிஷன்

உலக நாடுகளில் ரெசிஷன் வருவதற்கு முன்பாகவே அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் ரெசிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை 2008 சர்வதேச நிதி நெருக்கடியின் ஞாபகப்படுத்தினாலும், இந்த ரெசிஷன் கட்டாயம் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பல பொருளாதார வல்லுனர்கள் கூறியது மறக்க முடியாது.

ஜெர்மி ஹன்ட்

ஜெர்மி ஹன்ட்

பிரிட்டன் நாட்டின் நிதிமையச்சரான ஜெர்மி ஹன்ட் வியாழக்கிழமை பேசுகையில், பிரிட்டன் ஏற்கனவே ரெசிஷனில் தான் உள்ளது என அறிவித்தார். இதுவரையில் எந்தொரு நாடும் ரெசிஷனுக்குச் சென்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

55 பில்லியன் யூரோ திட்டம்

55 பில்லியன் யூரோ திட்டம்

பிரிட்டன் பொருளாதாரம் ரெசிஷனுக்குச் சென்றுவிட்ட நிலையிலும் ரிஷி சுனக் அரசு சுமார் 55 பில்லியன் யூரோ மதிப்பிலான வரி உயர்வு மற்றும் செலவின குறைப்புத் திட்டத்தை அறிக்க உள்ளது. நாட்டின் நிதி நிலை மற்றும் மோசமான பொருளாதாரத்தை மேம்படுத்தக் கட்டாயம் செலவுகளைக் குறைக்கும் முக்கியமான பட்ஜெட் கட்டாயம் அவசியம் எனப் பிரிட்டன் நிதியமைச்சர் ஜெர்மி ஹண்ட் தெரிவித்துள்ளார்.

 பேங்க் ஆப் இங்கிலாந்து

பேங்க் ஆப் இங்கிலாந்து

இதேவேளையில் பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் நீண்ட காலம் ரெசிஷனை எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளது. தற்போது துவங்கியுள்ளதாகக் கூறப்படும் ரெசிஷன் 2024 வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

ரிஷி சுனக் அரசிற்குப் பிரிட்டன் நாட்டின் பணவீக்கத்தைக் குறைப்பது தான் முக்கியமான குறிக்கோளாக உள்ளது. பணவீக்கம் தற்போது மக்களின் வருமானத்தையும், சேமிப்பையும், நிறுவனங்களின் வளர்ச்சியைத் தின்று வருகிறது என நிதிமையச்சரான ஜெர்மி ஹன்ட் தெரிவித்தார்.

அக்டோபர் மாத பணவீக்கம்

அக்டோபர் மாத பணவீக்கம்

பிரிட்டன் நாட்டின் அக்டோபர் மாத பணவீக்கம் தரவுகள் வெளியானது, இக்காலகட்டத்தில் நாட்டின் பணவீக்கம் 11.1 சதவீதமாக அதிகரித்து 41 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது. பிரிட்டன் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிப்பது எரிபொருள் செலவுகள் தான்.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியது முதல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் சமீபத்திய தாக்குதல் உக்ரைன் நாட்டின் மின் கட்டமைப்பைப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்த 'அந்த' ஈமெயில்.. அதிர்ச்சி அளிக்கும் முடிவை எடுத்த சலில் பாரிக்..!இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்த 'அந்த' ஈமெயில்.. அதிர்ச்சி அளிக்கும் முடிவை எடுத்த சலில் பாரிக்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK economy in recession Finance Minister Jeremy Hunt announced; Rishi Sunak govt next move

UK economy in recession Finance Minister Jeremy Hunt announced; Rishi Sunak govt next move
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X