மருமகன் ரிஷி சுனக்-ஐ 70 மணிநேரம் வேலை செய்ய சொன்னீங்களா மிஸ்டர் நாராயணமூர்த்தி..!

பிரிட்டன் நாட்டின் பொது தேர்தலில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் மோசமான தோல்வியைச் சந்தித்த நிலையில் இன்போசிஸ் குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த வேளையில் சமுக வலைத்தளத்தில் சிலர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியதை வைத்து கிண்டல் அடிக்க துவங்கியுள்ளனர்.

பிரிட்டன் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வரும் வேளையில், வாக்கு எண்ணிக்கை துவங்கிய சில மணிநேரத்திலேயே முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது உறுதியானது மட்டும் அல்லாமல் எக்சிட் போல் முடிவுகள் 100க்கு 100 சதவீதம் உண்மையானது.

மருமகன் ரிஷி சுனக்-ஐ 70 மணிநேரம் வேலை செய்ய சொன்னீங்களா மிஸ்டர் நாராயணமூர்த்தி..!

பிரதமர் ரிஷி சுனக் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகுவதாகலும், அட்சியை லேபர் கட்சி கையில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பின்பு கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி ஆட்சியை அமைக்க உள்ளது.

இந்த நிலையில் இணையதள வாசிகள் ரிஷி சனக்-ன் மாமனார் மற்றும் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பேசியதை வைத்து விமர்சனம் செய்துள்ளனர்.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு தி ரெக்கார்ட் என்ற ஒரு பாட்காஸ்ட்-ல் பேசிய போது, இன்றைய இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகத் தினமும் 12- 14 மணிநேரம் என வாரத்திற்கு 70 மணிநேரம் கடினமாக உழைக்க வேண்டும், அப்போது தான் கடின உழைப்புக்குப் பெயர்போன சீனா போல் உயர முடியும்.

நாட்டின் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் கடினமாக உழைத்தால் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக 2வது அல்லது 3வது இடத்திற்கு உயர முடியும் என பேசினார். இவர் பேசிய நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மருமகன் ரிஷி சுனக்-ஐ 70 மணிநேரம் வேலை செய்ய சொன்னீங்களா மிஸ்டர் நாராயணமூர்த்தி..!

நாராயண மூர்த்தி-யின் பேச்சு ஒருபக்கம் அதிர்ச்சி கொடுக்க மறுபுறம் இவரின் பேச்சுக்குப் பல தொழிலதிபர்கள், தலைவர்கள், ஸ்டார்ட்அப் சிஇஓ-க்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தது கூடுதல் அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இணையவாசிகள் டிவிட்டரில், என்ன மிஸ்டர் நாராயண மூர்த்தி மருமகனுக்கு வாரம் 70 மணிநேரம் பணியாற்ற அட்வைஸ் செய்யவில்லையா? ஆட்சியை இழந்துள்ளார் என பதிவிட்டுள்ளனர்.

மற்றொரு பதிவில் ஒருவர், வாரம் 70 மணிநேரம் பணி எல்லாம் கார்ப்பரேட் நிறுவனத்தில் தான், இனி மாமியார் சுதா மூர்த்தி சொல்லும் கதைகளுக்கு ரிஷி சுனக் சப்போர்ட் செய்வார், மாமனார் உடன் சேர்ந்து வாரம் 90 மணிநேரம் பணியாற்ற ரிஷி சுனக் அறிவுறுத்துவார் என டிவீட் செய்துள்ளனர்.

மருமகன் ரிஷி சுனக்-ஐ 70 மணிநேரம் வேலை செய்ய சொன்னீங்களா மிஸ்டர் நாராயணமூர்த்தி..!

பிரிட்டன் தேர்தல் முடிவுகளில் கெய்ர் ஸ்டார்மர்-ன் லேபர் கட்சி 650க்கு 410 இடங்களில் வெற்றிபெற்று இருக்கும் வேளையில் புதிய பிரதமராகத் தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் கெய்ர் ஸ்டார்மரை எதிர்த்துப் போட்டியிட்ட ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மோசமான நிலையில் 113 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆனால் ரிஷி சுனக் போட்டியிட்ட மேற்கு இங்கிலாந்தில் Richmond மற்றும் Northallerton தொகுதியில் 47.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+