பிரிட்டன் நாட்டின் பொது தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர்-ன் லேபர் கட்சி 650க்கு 410 இடங்களில் வெற்றிபெற்று இருக்கும் வேளையில் புதிய பிரதமராகத் தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மோசமான நிலையில் 113 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
இந்த மோசமான தோல்வியைக் கண்டு கன்சர்வேட்டிவ் கட்சியினர் வருந்துவதைத் தாண்டி இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம் இணையவாசிகள் ரிஷி சுனக், நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தி ஆகியோரை டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளனர்.

ஒருமுறை சுதா மூர்த்தி ஹிந்தி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தி கபில் சர்மா ஷோவில் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுதா மூர்த்தி பேசுகையில், "ஒருமுறை நான் லண்டனுக்கு சென்றிருந்தேன், அப்போது இமிகிரேஷன் அதிகாரி லண்டனில் நான் தங்கப்போகும் முகவரியை இமிகிரேஷன் படிவத்தில் எழுத கூறினார்கள்.
நான் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடான '10 டவுனிங் ஸ்ட்ரீட்' என்று எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய மகனும் லண்டனில் தான் வசிக்கிறார், ஆனால் அவரது முழு முகவரி எனக்கு நினைவில் இல்லை. வேறு வழி இல்லாமல் நான் இறுதியாக 10 டவுனிங் ஸ்ட்ரீட் என்று எழுதினேன் என கூறினார்.
இதை பார்த்த இமிகிரேஷன் அதிகாரி என்னைப் பார்த்து என்ன ஜோக் பன்றீங்களா?! என்று கேட்டார். நான் உண்மையைச் சொல்கிறேன் என கூறி விஷயத்தை விளக்கியதாகவும், ஒரு சில நிமிடம் லண்டன் விமான நிலையம் ஸ்தம்பித்து போனதாகவும் தெரிவித்தார்.
இதை நினைவில் வைத்துக்கொண்ட நெட்டிசன்கள் ரிஷி சுனக் பொது தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து Opinion4X என்ற டிவிட்டர்வாசி இனி சுதா மூர்த்தி சிம்பிள் ஆக பிரிட்டனுக்கு வரலாம் என தெரிவித்தார்.
மற்றொரு இணையவாசி இன்போசிஸ் குடும்பத்தில் ஒரு நபர் இந்திய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார், மற்றொருவர் பிரிட்டன் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுகிறார் என பதவிட்டு உள்ளனர்.
பிரபலமான நிறுவனமான ராயன்ஏர் டிவிட்டரில், கவலைப்படாதீங்க ரிஷி சுனக் உங்களுக்கு நாங்க சீட்டு கொடுக்கிறோம் என கிண்டலாக பதிவிட்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications