ஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..! #Recession

கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளதை நாம் கண்முன்னே பார்த்து வரும் நிலையில், வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் அதிகாரப்பூர்வமாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டுத் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக மக்களின் காவு வாங்கும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும், வல்லரசு நாடுகளின் பொருளாதாரச் சரிவும், வர்த்தக மந்த நிலையும் சாமானிய மக்களைப் பயமுறுத்தி வருகிறது.

பிரிட்டனில் அப்படி என்ன நடந்தது..? எப்படி #Recession என அறிவிக்கப்படுகிறது..?

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி

புதன்கிழமை பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு அந்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி ஆய்வுகளை வெளியிட்டது. இதில் 2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரிட்டனின் ஜிடிபி சுமார் -20.4 சதவீத (எதிர்மறை) வரையில் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது.

2 காலாண்டுகள் தொடர் சரிவு

2 காலாண்டுகள் தொடர் சரிவு

மார்ச் 30 வரையிலான காலாண்டில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் -2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவைச் சந்தித்தது. பொதுவாக எந்தொரு நாடு தொடர்ந்து 2 காலாண்டுகளாகப் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்கிறதோ அப்போது Recession என அறிவிக்கப்படும்.

2008 நிதிநெருக்கடி

2008 நிதிநெருக்கடி

2008ல் அமெரிக்காவில் பல வங்கிகள் நிதிநெருக்கடியால் மூடப்பட்டபோது உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைத் தலைகீழாக மாறியது யாராலும் மறந்திருக்க முடியாது. குறிப்பாக ஐடி வேலையில் இருந்தவர்கள் எந்தொரு காரணமும் இல்லாமல் வேலையை விட்டு நீக்கப்பட்டும், வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்காமல் போனதும் என உலக நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

அப்போது கூடப் பிரிட்டன் பொருளாதாரம் அதிகப்படியாக -2.1 சதவீதம் வரையில் தான் சரிவைச் சந்தித்து இருந்தது. ஆனால் இப்போது -20.4 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது பிரிட்டன்.

கொரோனா

கொரோனா

இந்த மிகப்பெரிய சரிவுக்கு முக்கியக் காரணம் கொரோனா தான், பிரிட்டனில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் அனைத்து வர்த்தகத்தையும் முடக்கியது. இதனால் நாட்டின் மொத்த வர்த்தகமும் தடைபெற்றது இதன் வாயிலாகவே பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனப் பிரிட்டன் அரசு தெரிவிக்கிறது.

மார்ச் 23

மார்ச் 23

முதல் காலாண்டில் பொருளாதாரப் பாதிப்புகளை முழுமையாகக் கணிக்க முடியவில்லை, இதற்குக் காரணம் மார்ச் 23ஆம் தேதி தான் பிரிட்டனில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் அடுத்த 9 நாட்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் அளவீட்டை முழுமையாகக் கணிக்க முடியவில்லை, இதன் வாயிலாகவே முதல் காலாண்டில் வெறும் -2.1 சதவீத பொருளாதாரச் சரிவு பதிவாகியுள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பா

இதேபோல் Eurozone-ன் பொருளாதார புள்ளிவிவரங்களும் வெளியாகியுள்ளது. இந்தப் புள்ளிவிவரத்தில் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளின் பொருளாதாரமும் அடக்கம். 2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் Eurozone-ன் பொருளாதாரம் 12.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இதனால் பிரிட்டனைப் போலவே ஐரோப்பாவும் தற்போது Recession-க்கு தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

வல்லரசு நாடான அமெரிக்கா பொருளாதாரச் சரிவு குறித்து முழுமையான அறிவிக்கை வெளியிடாத நிலையில், இந்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஐரோப்பாவில் பொருளாதாரச் சரிவு இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் பிரிட்டன், ஐரோப்பா போலவே அமெரிக்காவும் Recession-க்கு தள்ளப்பட்டு இருக்க வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+