உலகில் பெரும் பகுதியை கட்டியாண்ட பிரிட்டன் அரசு இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றால் மிகையில்லை, ரிஷி சுனக் அந்நாட்டு அதிபராக நியமிக்கப்பட்ட போது உலக நாடுகளே பாராட்டித் தள்ளியதை மறக்க முடியாது.
ஆனால் தற்போது அந்நாட்டு மக்கள் விலைவாசி உயர்வாலும், வேவைவாய்ப்பு பிரச்சனையாலும், குறைந்த வருமானம் குறித்தும் அந்நாட்டுப் பிரதமரான ரிஷி சுனக்-ஐ கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் அந்நாட்டின் பொருளாதாரத் தரவுகள் வெளியாகி ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளது.

பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகள் படி, அக்டோபர் மாதம் அந்நாட்டின் ஜிடிபி - 0.3 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 0.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது, இதனால் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் கடுமையான ரெசிஷன் நோக்கி செல்கிறது என அச்சம் நிலவி வருகிறது.
இதேவேளையில் பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து 15 வருட அதிகப்படியான வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பணவீக்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் உறுதியாக இருப்பது இந்த மோசமான ஜிடிபி டேட்டா மூலம் தகர்ந்து வருகிறது.
ஜூலை மாதத்தில் இருந்து அந்நாட்டின் ஜிடிபி முதல் முறையாக மாதாந்திர அடிப்படையில் மைனஸ் என்ற அளவீட்டுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் 5.25 சதவீத பென்ச்மார்க் வட்டி விகிதம் ஜூன் 2024ல் தான் வட்டி விகிதம் குறையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, இதேபோல் 10 வருட அரசு பத்திர முதலீட்டின் மீதான லாபம் மே மாதத்திற்குப் பின்பு மோசமான நிலையை அடைந்துள்ளது. மேலும் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் -4.6 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் ஆட்சியைக் கடும் போட்டிக்கு மத்தியில் கைப்பற்றிய ரிஷி சுனக் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறார். ரிஷி சுன்க் ஏற்கனவே அந்நாட்டின் நிதியமைச்சராக இருந்த வேளையிலும் பிரிட்டன் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.
இதனால் பிரிட்டன் நாட்டில் வேலைவாய்ப்பு, வர்த்தக வாய்ப்புகள் குறைந்துள்ளது. இது மக்களின் வருமானத்தில் நேரடியாகப் பாதிக்கும் காரணத்தால் 4.6 சதவீத பணவீக்கத்தைச் சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் ஜிடிபி இரண்டாவது காலாண்டில் அதாவது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.6% வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகளை வியக்க வைத்த நிலையில், உலக நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பணவீக்க அளவீட்டில் மட்டும் இந்தியா பின்தங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications