இந்தியாவில் $1.2 பில்லியனை முதலீடு செய்யும் பிரிட்டன்.. எதற்காக தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பசுமை திட்டங்கள் மற்றும் புதிபிக்கதக்க எரிசக்தி திட்டங்களில் இங்கிலாந்து முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

 

தங்க கடன் வாங்குவோர் எண்ணிக்கை 77% உயர்வு.. என்ன காரணம்..?!

இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது பிரிட்டீஷ் பிரதி நிதி ரிஷி சுனக் இடையே 11 வது இந்தியா - இங்கிலாந்து பொருளாதார மற்றும் நிதி உரையாடலில் இது குறித்து பேச்சு வார்த்தையானது நடந்தது.

இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்

இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்

வருடாந்திர உச்சி மாநாட்டில் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், சுனக்கும் இந்தியாவில் பசுமைத் திட்டங்கள் மற்றும் புதுபிக்கதக்க எரிசக்தி ஆகியவற்றினை மேம்படுத்த, 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொது மற்றும் தனியார் முதலீடுகள் செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியாவின் இலக்கு

இந்தியாவின் இலக்கு

இந்த புதிய முதலீடுகள் மூலம் 2030ம் ஆண்டுக்குள் 450GW புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் இலக்கை ஆதரிக்கும்.

மேலும் 2022-26 காலகட்டத்தில் இந்தியாவில் பசுமைத் திட்டங்களில் இங்கிலாந்தின் வளர்ச்சி நிதி நிறுவனமான CDCயின் 1 பில்லியன் டாலர் முதலீடு, புதுமையான பசுமை தொழில்நுட்பத் தீர்வுகளில் பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆதரவாக கூட்டு முதலீடுகள் மற்றும் ஒரு புதிய 200 மில்லியன் டாலர் தனியார் மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்களையும் இந்த கூட்டத்தில் போடப்பட்டது.

சிஎஃப்எல்ஐ நிதி திரட்டும்
 

சிஎஃப்எல்ஐ நிதி திரட்டும்

சிஎஃப்எல்ஐ (CFLI) இந்தியா கூட்டுறவு காற்று மற்றும் சூரிய சக்தி மற்றும் பிற பசுமை தொழில்நுட்பங்கள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு தனியார் மூலதனத்தை திரட்டும்.

இந்த கூட்டு ஒப்பந்தத்தினையடுத்து இந்த கூட்டணியானது 6.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுக்கு பொறுப்பான நிதி நிறுவனங்களின் குழுவால் வழிநடத்தப்படும் மற்றும் காலநிலை இலட்சியம் மற்றும் தீர்வுகள் குறித்த ஐநாவின் சிறப்பு தூதர் மைக்கேல் ப்ளூம்பெர்க் தலைமையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ஆதரவு

இங்கிலாந்து ஆதரவு

சமீபத்தியில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49%லிருந்து 74% ஆக உயர்த்துவதற்கான இந்தியாவின் சமீபத்திய முடிவை பிரிட்டிஷ் அரசு தரப்பு வரவேற்றது, இது இங்கிலாந்து நிறுவனங்களுக்கு இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளில் அதிக உரிமையை பெற உதவும் என்று பிரிட்டிஷ் உயர் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்புகள்

வேலை வாய்ப்புகள்

இருதரப்பு வர்த்தகம் 2020ல் 18 பில்லியனுக்கும் அதிகமாக இருந்தது. இது இரு நாடுகளிலும் அரை மில்லியன் வேலைகளை ஆதரித்தது. மேலும் இவ்விரு நாடுகளும் 2030ல் வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளன, இதில் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவது உட்பட பலவற்றை பற்றியும், பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK govt announces above $1 billion investment in India’s green, renewable energy project

UK govt announces above $1 billion investment in India’s green, renewable energy project
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X