இந்தியா - இங்கிலாந்து ஆகிய நாடுகள் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் ஒரு செயலில், வரித்தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்திருப்பதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பினை இந்திய பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மிகக் குறைந்த வரிவிதிப்பில் கிடைக்கும். தற்போது 100%-க்கும் அதிகமாக இருக்கும் வரி, இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதற்கட்டமாக 10 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளன. இதன் விளைவாக, ரேஞ்ச் ரோவர், ஜாகுவார், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற பிரபலமான பிரிட்டிஷ் கார்கள் இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த வரிவிலக்கு அனைத்து கார்களுக்கும் பொருந்தாது. இது ஒரு வரம்பிற்குட்பட்டவை ஆகும். அதாவது, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்கள் மீது தான் இந்த வரிச்சலுகை அமலும், அதன் பின் பழைய வரி விதிக்கப்படும். இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக பயனளிக்கக்கூடியதாகவும், இந்தியாவின் வாகன சந்தையில் போட்டியை அதிகரிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "இதுவரை இல்லாத வரலாற்றுப் புரட்சியாக, இந்தியா - இங்கிலாந்து இடையே வரித்தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் இரட்டிப்பு பங்களிப்பு ஒப்பந்தம் (Double Contribution Convention) வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது" என தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இருபுற வர்த்தகம் 2030ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாட்களுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெற்றதால், Jaguar, Land Rover, Rolls‑Royce, Bentley, Aston Martin, Mini போன்ற பிரிட்டிஷ் பிரீமியம் கார்கள் இந்தியாவில் வரி விகிதம் 100%இல் இருந்து சுமார் 10% வரை குறைய வாய்ப்புள்ளது. மொத்த வர்த்தக மதிப்பின் 99% வரி இல்லாமல் செல்லும் என்று இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால், quota அடிப்படையில் மட்டுமே குறைக்கப்படும்.
சொகுசு கார்களின் விற்பனை வளர்ச்சி உயர்வு: கடந்த 2024ஆம் ஆண்டில் சொகுசு வாகன விற்பனை கணிசமாக உயர்ந்தது. மொத்தமாக 50,000-க்கும் மேற்பட்ட கார்கள் விற்கப்பட்டுள்ளது. Jaguar, Land Rover இந்தியா தனது வரிசை விற்பனையில் 40% வளர்ச்சி பெற்றுள்ளது. Defender, Evoque, Velar ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. Lamborghini, Mercedes Maybach ஆகிய பிராண்ட்டுகள் 10% முதல் 150% வரை உயர்வு பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications