பொதுவாக நிறுவனங்கள் ஒரு ஊழியர்கள் சரியாக பணிபுரியவில்லை எனில், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம். அல்லது மந்த நிலைக்கு மத்தியில் செலவு குறைப்பின் கட்டாயத்தால் பணி நீக்கம் செய்யப்படலாம். ஆனால் ஒருவர் வழுக்கை தலையால் வேலையில் நீக்கப்படலாமா? அப்படி ஒரு நிகழ்வு இருக்குமா? இது ஏற்க கூடியதா? என்ற கேள்வி பலருக்கும் எழும்.
ஆனால் இது உண்மை தான், வழுக்கை தலையால் வேலை ஒருவருக்கு வேலையே பறிபோயுள்ளது.
எனினும் வேலை பறிபோனவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமும் பார்க்க வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது.
ரூ.71 லட்சம் அபராதம்
வழுக்கை தலையால் வேலை இழந்த நபருக்கு நீதிமன்றம் ஒன்று 71 லட்சம் ரூபாய் கொடுக்க கூறியுள்ளது. இங்கிலாந்தில் நடந்த இந்த பரபர சம்பவம், லிங்கோ நெட்வொர்க்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் தான் அரங்கேறியுள்ளது.
வழுக்கை தலையா வேண்டாம்?
இது வழுக்கை தலையுடன் இருக்கும் 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், நிறுவனத்தில் பணியில் இருக்க கூடாது என கூறி அந்த நிறுவனத்தின் மேலாளர் கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளார்.
இது அந்த நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இவ்வாறு கட்டாயமாக வெளியேற்ற ஊழியர்களில் ஒருவரான மார்ஜ் ஜோன்ஸ் என்பவர், இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கினை தொடர்ந்துள்ளார்.
தவறாக பணி நீக்கம்
தனக்கு தலைமுடி என்பது முழுவதும் இருந்தாலும், தன்னை தவறாக பணி நீக்கம் செய்துள்ளதாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் நீதிமன்றத்தில், பிலிப் ஹெஸ்கெத் நானும் வழுக்கை தலையுடன் இருக்கிறேன். அதுபோன்று என் அலுவலகத்தில் இருப்பவர்களும் விரும்பவில்லை. ஆற்றல் மிகுந்த இளமையான நபர்கள் இருந்தால் தான், வேலைகள் விரைவாகவும் தெளிவாகவும் நடக்கும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
பல்வேறு சிக்ஜல்
ஆனால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஜோன்ஸ் தனக்கு தனது வேலையின் மூலம் முழு உரிமைகளும் கிடைக்கவில்லை. இது நியாமற்ற ஒரு செயல் ஆகும். மேலும் அவரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் அவரை மோசமான செயல்திறன் பிரிவில் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்ல இன்னும் இது போன்ற பல மன அழுத்தங்களுக்கு மத்தியில் ஜோன்ஸ் வேலையில் இருந்து வெளியேற திட்டமிட்டு கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே நிறுவனத்திற்கு எதிராக ஒரு புகாரையும் தொடர்ந்துள்ளார்.
ஏன் ரூ.71 லட்சம்?
அந்த ராஜினாமா கடிதத்தில் தான் சரியானவன் அல்ல, என்ற மோசமான பொய்கள் குறித்து மிக கவலையடைந்துள்ளேன். என்னை மோசமாக தோற்றமளிக்கும் விதமாக அனைத்தும் உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக வழுக்கை தலையாக இருப்பதும், பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் என்ற நிலையில் தான், ஜோன்ஸ் 71 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.
திருந்துமா?
இன்றும் பல நிறுவனங்களிலும் ஒரு ஊழியரை வெளியேற்ற வேண்டுமெனில் நிறுவனங்கள் இது போன்றா நடவடிக்கையில் தான் ஈடுபடுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் பல நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றது. ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கட்டாயமாக அவர்கள் மீது பிரச்சனைகளை திணிப்பது, குறிப்பாக வலுக்கட்டாயமாக அவர்களை நெருக்கடிக்குள் தள்ளுவது என இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு சரியான பாடம் தான்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications