உலகம் முழுவதும் சுடுகாட்டு பயணம்.. 1 கோடிக்கு அதிகமாக செலவு செய்த மார்க்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு சிலருக்கு வினோதமான பொழுதுபோக்கு மற்றும் வழக்கம் இருக்கிறது என்பதை செய்திகள் மூலம் பார்த்து வருகிறோம்.

 

அந்த வகையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு உலகம் முழுவதும் உள்ள கல்லறைகளை பார்க்கவேண்டும் என்ற வினோதமான பொழுதுபோக்கு உள்ளது.

அவர் இதுவரை உலகில் உள்ள முக்கிய தலைவர்களின் கல்லறைகளை பார்ப்பதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..! 6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..!

கல்லறை சுற்றுப்பயணம்

கல்லறை சுற்றுப்பயணம்


பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மார்க் டப்ஸ் என்பவர் உலகில் உள்ள சுமார் 700 கல்லறைகளுக்கு இதுவரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் ரூபாய் 1,53,27,944 செலவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

புரூஸ்லீ கல்லறை

புரூஸ்லீ கல்லறை

சியாட்டிலில் உள்ள புரூஸ்லீயின் கல்லறை, சீனாவில் உள்ள மாவோ கல்லறை உள்பட பல உலகப் பிரபலங்களின் கல்லறைகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். அதேபோல் வாஷிங்டனில் உள்ள ஜான் கென்னடி கல்லறை, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மர்லின் மன்றோ கல்லறைகளையும் அவர் நேரில் சென்று பார்த்துள்ளார்.

அனுபவம்
 

அனுபவம்

பிரபலங்களின் கல்லறைகளுக்கு செல்ல வேண்டும் என்பது எனக்கு பல ஆண்டுகளாக உந்துதல் இருந்தது என்றும் இந்த பயணங்கள் பள்ளிகளில் அதிகம் கற்றுக் கொள்ள முடியாத அனுபவம் என்றும், இவற்றை கற்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் 49 வயதான மார்க் டப்ஸ் தெரிவித்துள்ளார்.

கவர்ந்த கல்லறைகள்

கவர்ந்த கல்லறைகள்


மேலும் தன்னுடைய கல்லறை பயணத்தை நிறுத்த போவதில்லை என்றும் இன்னும் தனது கல்லறை பயணம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற பல கல்லறைகளில் பிரிட்டன் நியூராலாஜிஸ்ட் சர் ரோஜர் பன்னிஸ்டர், கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ், பந்தய ஓட்டுநர் ஜிம் கிளார்க் மற்றும் பீட்டர் பான் எழுத்தாளர் ஜே.எம். பேரி ஆகியோர்களின் கல்லறைகள் தன்னை மிகவும் கவர்ந்தது என்று மார்க் டப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கல்லறை

ஸ்டாலின் கல்லறை


சோவியத் யூனியனின் புரட்சியாளர் ஸ்டாலின் கல்லறையை தான் ஏற்கனவே சென்று பார்த்திருப்பதாகவும், ஆனால் மீண்டும் அந்த கல்லறையை பார்க்க மாஸ்கோவிற்கு செல்ல விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் சர்ச்சில் மற்றும் ரூஸ்வெல்ட் கல்லறைகளையும் நான் பார்த்துள்ளேன் என்றும் டப்ஸ் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான அனுபவங்கள்

வித்தியாசமான அனுபவங்கள்

உலகெங்கிலும் உள்ள பல கல்லறையை பார்க்கச் சென்றபோது தனக்கு வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அனுபவங்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் கல்லறை பயணம்

தொடரும் கல்லறை பயணம்

இந்தியாவிலுள்ள கல்லறைகள் உள்பட பல நாடுகளின் கல்லறைகளை நேரில் தொடர்ந்து சென்று பார்ப்பேன் என்றும், என்னுடைய கல்லறை பயணம் என்னை கல்லறையில் வைக்கும் வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK man spends over a crore to visit graveyards around the world

UK man spends over a crore to visit graveyards around the world | உலகம் முழுவதும் சுடுகாட்டு பயணம்.. 1 கோடிக்கு அதிகமாக செலவு செய்த மார்க்..!
Story first published: Wednesday, August 17, 2022, 9:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X