பிரிட்டன், பெரும் அரசியல் தடுமாற்றத்திற்கு பின்பு புதிய அரசின் கீழ் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அந்நாட்டு பொருளாதாகம் தத்தளித்து வருகிறது. இதற்கிடையில் பிரிட்டன் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான பணக்காரர்கள் வெளியேறுவது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
பிரிட்டன் நாட்டில் இருந்து 2025ஆம் ஆண்டு சுமார் 16,500 மில்லியனர்கள் வெளியேற உள்ளனர். இது உலகளவில் அதிகப்படியான வெளியேறிய மில்லியனர்கள் அல்லது HNI-கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுவாக நெருக்கடிகள் அதிமாக உள்ள நாட்டில் தான் இத்தகைய வெளியேற்றம் நடக்கும், ஆனால் பிரிட்டனில் நடத்திருப்பது பெரும் அதிர்ச்சியாகவே பலரும் பார்க்கின்றனர் என Henley Wealth Migration ரிப்போர்ட் கூறுகிறது.

உதாரணமாக சீனாவில் இருந்து வெளியேறியவர்களை விட இரு மடங்கும், இந்தியாவில் இருந்து வெளியேறிவர்களை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் மில்லியனர்கள் பிரிட்டன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய மற்றும் மைய காரணமாக இருப்பது அந்நாட்டின் லேபர் மார்கெட் மற்றும் ஹவுசிங் மார்கெட் தான் முக்கிய காரணங்களாக உள்ளது. இதை தாண்டில் பிரிட்டன் நாட்டில் அதிகரிக்கப்பட்டு உள்ள கேப்பிடல் கெயின்ஸ் வரி மற்றும் inheritance வரியும் முக்கிய காரணமாக உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து பிரிட்டன் பொருளாதாரம் தொடர்ந்து சரிவை நோக்கி செல்லும் காரணத்தாலேயே பெரும் பணக்காரர்கள் புதிய வாய்ப்புகளை தேடும், புதிய கனவுகளுடனும் பிற நாடுகளுக்கு குடியேறுகின்றனர்.
2025ஆம் ஆண்டில் அதிகப்படியான மில்லியனர்கள் குடியேறிய நாடு என்றால் அது UAE 9,800 பேர், இதை தொடர்ந்து அமெரிக்கா 7500, இத்தாலி 3,600 பேர் குடியேறியுள்ளனர்.
உழைப்புச் சந்தை பிரச்சனை
கடந்த இரு தசாப்தங்களில் பிரிட்டன் நாடு, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகளில் இருந்து குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் ஊழியர்களை அதிகம் குடியேற்றப்பட்டு பணியில் அமர்த்தியது. இதனால் கடந்த 15 ஆண்டுகளில் அந்நாட்டில் பணியாளர்களின் சம்பளம் பணவீக்கத்திற்கு ஏற்ப உயரவில்லை, ஆனால் இதேகாலக்கட்டத்தில் பொருட்களின் விலை உயர்ந்தது.
உதாரணமாக ஒரு படித்த ஊழியர் நியூயார்க்கில் லண்டன் சம்பளத்தை காட்டிலும் இரு மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார். ஆனால் வாழ்க்கை செலவு 30 சதவீதம் மட்டுமே அதிகம். இதேபோல் துபாயில் வரியில்லாமல் அதே 2 மடங்கு அதிக சம்பளம், வாழ்க்கை செலவு 30 சதவீதம் குறைவு.
இதனால் திறமையானவர்களும், பணக்காரர்களும் மேம்பட்ட வாழ்க்கை முறை, முதலீட்டு வாய்ப்பு, வர்த்தக வாய்ப்பை தேடி பிரிட்டனை விட்டு அமெரிக்கா, துபாய், இத்தாலி போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர். அடுத்த பிரச்சனை பிரிட்டன் ரியல் எஸ்டேட் சந்தை.
ரியல் எஸ்டேட் சந்தை நெருக்கடி
பிரிட்டன் நாட்டின் ரியல் எஸ்டேட் பிரச்சனை நேற்று, இன்று உருவானது இல்லை, 1970களின் இறுதியில் உருவான ஒரு விஷயம். பிரட்டன் அரசு இப்போது அரசுக்கு சொந்தமாக வீடுகளை குத்தகைதாரர்கள் தள்ளுபடியில் வாங்க அனுமதித்த சீர்திருத்தம் இப்போது வரையில் பெரும் பிரச்சனையை உருவாக்கி வருகிறது என முதலீட்டு வங்கியாளர் சர்தக் அஹுஜா தனது லிங்க்டின் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட சீர்திருத்தம் காரணமாக தனியார் கட்டட உரிமையாளர்களுக்கு வீடு கட்ட ஊக்கத்தொகை, மானியம் வழக்கப்படுவது இல்லை. இன்று லண்டனில் சுமார் 2 லட்சம் வீடற்றோர் உள்ளனர். இது மக்கள் தொகையில் 2 சதவீதம். உலக வளர்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும் போது பிரிட்டன் சந்தை நிலவும் மிகவும் அதிகம்.
தற்போது வீடற்றோர் மக்களுக்கு பிரிட்டன் அரசு வரி பணத்தை செலவிடுகிறது, இதனால் நிதி பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது.
உற்பத்தித்திறன் வீழ்ச்சி
இந்த அதிகப்படியான செலவுகள் சுமை அந்நாட்டின் அரசால் புதுமை, உற்பத்தி, உள்கட்டமைப்பு, சுகாதாரத்திற்கு செலவிட முடியாமல் போன்து. இதன் விளைவு OECD நாடுகளில் பிரிட்டன் தான் உற்பத்தித் திறனில் மோசமானது.
அதிகப்படியான வரி , போதாத ஊதியம் , வீடு வாங்க முடியாத நிலை, மருத்துவ செலவு அதிகரிப்பு, உள்கட்டமைப்புக்கு போதுமான நிதி இல்லாதது என 360 டிகிரியிலும் பிரிட்டன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவே பெரும் பணக்காரர்களின் வெளியேற்றம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications