ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் தனியாகப் பிரிந்ததும், பிரிந்த பின் அந்நாட்டில் எடுக்கப்பட்டும் அரசு முடிவுகள் மோசமாகக் கருதினாலும், இந்தியர்களும், முக்கியத் துறை சார்ந்த இந்திய வல்லுநர்களுக்கு (Professionals) ஜாக்பாட் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி என்ன ஜாக்பாட் என்று தானே கேட்குறீங்க. வாங்க சொல்றோம்.
ப்ரீத்தி பட்டேல்
புதிய பிரிட்டன் அரசின் உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் உலகின் தலைசிறந்த மனிதர்களைப் பிரிட்டன் நாட்டிற்கு ஈர்க்கும் வண்ணம் புதிய குடியுரிமை மதிப்பெண் முறையை அறிவித்துள்ளார். இப்புதிய முறை வருகிற ஜனவரி 1, 2021ஆம் ஆண்டு முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.
இப்புதிய முறை இந்தியர்களுக்கும் மிகவும் சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏன் தெரியுமா..?
STEM துறை
பிரிட்டன் உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் அறிவித்துள்ள புதிய குடியுரிமை மதிப்பெண் முறையில் STEM துறை அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணக்கு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு அதிகளவில் ஈர்க்கும் வகையில் வரையறை செய்யப்பட்டு உள்ளது.
இவர்கள் மூலமாகப் புதிய பிரிட்டன் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்துவது தான் போரீஸ் ஜான்சன் அரசின் நோக்கம்.
மதிப்பெண்கள்
இப்புதிய குடியுரிமை கொள்கையில் திறன், பணியாற்றும் துறை, சம்பளம், தகுதி, படிப்பு, வயது அடிப்படையில் துறை சார்ந்த வல்லுனர்களுக்கு மதிப்பெண் மதிப்பிடப்படும். இதன் மூலம் குடியுரிமை அளிக்கப்பட உள்ளது. இந்த முறை தான் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதே முறை தற்போது பிரிட்டன் நாட்டிலும் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்தியர்கள்
இதை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் துறை சார்ந்த வல்லுனர்களும், வல்லரசு நாடுகளுக்குத் தேவையான அனைத்து திறன் கொண்ட மாணவர்களும், ஊழியர்களும் இந்தியாவில் இருக்கும் காரணத்தால் மதிப்பெண் அடிப்படையில் பிரிட்டன் நாட்டுக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்கள் எளிதாகத் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இதேபோல் சீனர்களுக்கும் அதில் அதிகளவில் இந்தியர்களுடன் போட்டிப்போடுவார்கள்.
இந்தியாவில் இருந்து பிரிட்டன் நாட்டிற்குச் செல்லும் இந்திய மாணவர்களுக்கும் இந்த முறை பெரிய அளவில் உதவும் எனத் தெரிகிறது
அமெரிக்கா
தற்போது அமெரிக்காவில் மாணவர்களுக்கும் சரி, வல்லுனர்களுக்கும் சரி குடியுரிமை பெறுவதும் மிகவும் கடினமாக இருக்கிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் பிரிட்டன் அரசு அறிவித்துள்ள இந்த முறையின் மூலம் பல ஆயிரம் இந்தியர்கள் இப்புதிய முறையின் மூலம் குடியுரிமை பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
ரிஷி சுனக்
பிரிட்டன் நிதியமைச்சர் ஆனார் இன்போசிஸ் மருமகன்.. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் ஆதிக்கம்..!
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications