2023 ஆம் நிதியாண்டில் துவக்கத்தில் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய செலவுகளைக் குறைக்கும் விதமாகவும், அளவுக்கு அதிகமாகப் பணியில் சேர்க்கப்பட்ட ஊழியர்களைக் குறைக்கும் பொருட்டுக் கண்மூடித்தனமாகப் பணிநீக்கம் செய்தது.
மே மாதத்தில் இந்தப் பணிநீக்கம் குறைந்து, புதிய வேலைவாய்ப்புகள் மெல்ல மெல்ல உருவாகும் காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பியச் சந்தையில் பணவீக்கம் அதிகமானது. இதனால் சர்வதேசச் சந்தையில் மொத்தமாக டிமாண்ட் குறையத் துவங்கியது, இதன் எதிரொலியாக மீண்டும் பணிநீக்கம் பல துறையில் துவங்கியுள்ளது.

இதன் வாயிலாகப் பிரிட்டன் அவுட்சோர்சிங் நிறுவனமான கேபிடா (Capita) செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகளாவிய தனது வர்த்தகத்தில் சுமார் 900 ஊழியர்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்தப் பணிநீக்கத்தின் மூலம் நிறுவனத்திற்கு மறைமுகச் செயல்பாடுகள் மற்றும் மேல்நிலைகளில் பணியாற்று ஊழியர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளனர். கேபிடா நிறுவனத்தின் இந்த முடிவு வாயிலாகப் பிரிட்டன், ஐரோப்பா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருக்கும் ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.
பிரிட்டன் நாட்டின் அவுட்சோர்சிங் நிறுவனமான கேபிடா தனது சர்வதேச வர்த்தகத்தில் சுமார் 50,000 பேரைப் பணியமர்த்தியுள்ளது. இதில் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது மூலம் 2 சதவீத மக்களை மட்டுமே பணிநீக்கம் செய்ய உள்ளது.
Capita நிறுவனம் பொது மற்றும் தனியார்த் துறைகளுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. மார்ச் மாதத்தில் இந்நிறுவனத்தில் ஒரு சைபர் அட்டாக் நடந்தது, இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications