ஒரே ஒரு அறிக்கையால் பங்கு சந்தையில் இவ்வளவு பெரிய மாற்றமா? என்ன தான் நடக்குது? அதெப்படி இந்தியாவை விட இங்கிலாந்து பங்கு சந்தை ஆறாவது பங்கு சந்தையாக இந்தியாவினை தாண்டி முன்னேற்றம் கண்டுள்ளது. வாருங்கள் பார்க்கலாம்.
ஜனவரி 24 அன்று வெளியான அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டு வருகின்றன.
சொல்லப்போனால் அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது கடந்த ஜனவரி 24க்கு பிறகு 140 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது இந்திய பங்கு சந்தையினையே ஆட்டம் காண வைத்துள்ளது. இந்திய பங்கு சந்தை முழுவதுமே ஒரு தடுமாற்றம் காணப்படுகின்றது.
நிபுணர்களின் பரிந்துரை?
இது மேற்கொண்டு எந்த அளவுக்கு சரியுமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பல நிபுணர்களும் தற்போதைக்கு அதானி குழும பங்குகளில் இருந்து விலகியே இருக்க பரிந்துரை செய்கின்றனர்.
அதானி குழுமம் செலவு குறைத்து கடனை அடைத்து வருகின்றது. பல கடன்களை முன் கூட்டியே அடைக்க திட்டமிட்டு வருகின்றது. இது ஒரு வகையில் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், அதானி குழுமத்தின் நீண்டகால வளர்ச்சியினை இது பாதிக்கலாம் .
ஆய்வு நடத்தவில்லை
எனினும் அதானி குழுமம் ஆரம்பம் முதல் கொண்டே இந்த அறிக்கையினை மறுத்து வரும் நிலையில், அதானி குழுமத்திடம், இது குறித்தான ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை என மறுத்துள்ளது.
இதற்கிடையில் இழந்த நம்பிக்கையை மீட்க நிறுவனத்தின் வளர்ச்சியினை, கடனை திரும்ப அடைத்து வருகின்றது. மேற்கொண்டு பல திட்டங்களை வகுத்து வருகின்றது.
பி எஸ் இ சந்தை மதிப்பு
பி.எஸ்.இ-யில் உள்ள சந்தை மதிப்பானது 261 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஜனவரியில் இருந்து சந்தையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், 4% சந்தை மதிப்பினை இழந்துள்ளது.
அதானி குழுமத்தின் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சர்வதேச முதலீட்டாளர்கள் இழப்பினை கண்டுள்ளனர். இதற்கிடையில் அதானி குழும பங்குகளில் இருந்து விலகியுள்ளனர் எனலாம். இது இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இன்னும் சிறிது காலத்திற்கு இந்திய சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் சரிவில் பங்கு சந்தை
கடந்த அமர்விலேயே 900 புள்ளிகளுக்கு மேலாக சரிந்த நிலையில், நிஃப்டியும் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டது. இது நிலவி வரும் அரசியல் பதற்றம், பணவீக்கம் என பல காரணிக்கு மத்தியில் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் சர்வதேச சந்தையும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருவது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்ட்கியுள்ளது.
30ல் 29 பங்குகள் சரிவு
இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தாலும், கடந்த அமர்வில் கடந்த பிப்ரவரி 1ல் இருந்து பார்க்கும்போது மோசமான சரிவினைக் கண்டுள்ளது. சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் 29 பங்குகள் சரிவினைக் கண்டுள்ளது.
இது கடந்த அமர்வில் இருந்து 991.17 புள்ளிகள் அல்லது 1.63% சரிவினைக் கண்டுள்ள நிலையில், 59,681.55 புள்ளிகளாக சரிவினைக் கண்டுள்ளது. நிஃப்டி 50 272.40 புள்ளிகள் அல்லது 1.53% சரிவினைக் கண்டு, 17,554.30 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications