இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மூலம் முதலீட்டாளர்கள் ரோலர்கோஸ்ட் பயணத்தை அனுபவித்துள்ளனர் என்றால் மிகையில்லை. இதில் பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக்-ன் மனைவியும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி-யின் மகளான அக்ஷதா மூர்த்தி பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளார்.
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் கடந்த வாரம் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதில் இன்போசிஸ் நிர்வாகம் தனது பங்குதாரர்கள் அனைவருக்கும் ஒரு பங்கிற்கு 17.50 ரூபாயை ஈவுத்தொகையாக கொடுக்க உள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் இன்போசிஸ் பங்குகளை வைத்திருக்கும் அனைத்து பங்குதாரர்களும் பலன்பெரும் வகையில் அக்ஷதா மூர்த்தி-யும் பெரும் தொகையை பெற உள்ளார்.

பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக்-ன் மனைவியும் நாராணயமூர்த்தி-யின் ஒரே மகளான அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தில் 3,89,57,096 பங்குகள் அதாவது மொத்த இன்போசிஸ் பங்குகளில் 1.07 சதவீத பங்குகளை டிசம்பர் 31, 2022 நிலவரப்படி வைத்திருந்தார்.
இதன் மூலம் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 17.50 ரூபாய் ஈவுத்தொகை மூலம் அக்ஷதா மூர்த்தி சுமார் 68.17 கோடி ரூபாய் ஈவுத்தொகையை பெற உள்ளார். இன்போசிஸ் நிர்வாகம் இந்த ஈவுத்தொகையை ஜூன் மாதத்தில் அளிக்க உள்ளது.
இது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும் திங்கட்கிழமை நடந்தது மொத்தமாக புரட்டிப்போட்டு உள்ளது. மார்ச் காலாண்டில் இன்போசிஸ் 8 சதவீத உயர்வுடன் 6,128 கோடி ரூபாய் லாபத்தையும், 16 சதவீத வருடாந்திர உயர்வில் 37,441 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளதாக அறிவித்த நிலையில், இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.

இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 15 சதவீதம் வரையில் சரிந்து லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு பெரும் சரிவை பதிவு செய்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வெறும் 0.23 சதவீத உயர்வுடன் 1260.95 ரூபாயாக உள்ளது.
ஈவுத்தொகை மூலம் 68.17 கோடி ரூபாய் சம்பாதித்த அக்ஷதா மூர்த்தி, பங்கு சரிவு மூலம் இன்போசிஸ்-ல் 1.07 கோடி ரூபாய் பங்குகளை வைத்திருக்கும் நிலையில் 541 கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்டு உள்ளார். இதன் மூலம் ஒரே நாளில் 49 மில்லியன் பவுண்ட் வரையிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளார்.
இதே நேரத்தில் திங்கட்கிழமை பிரிட்டன் பார்லிமென்ட் கமிஷனர் டேனியல் கிரீன்பெர்க், குழந்தை பராமரிப்பு நிறுவனத்தில் அந்நாட்டு பிரதமர் மனைவி அக்ஷதா மூர்த்தி-க்கு சொந்தமான சிறிய அளவிலான பங்குகள் இருப்பை பிரிதமர் வெளிப்படையாக அறிவிக்கத் தவறிவிட்டாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications