உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளப்படும் நிலையில், ஐரோப்பா மற்றும் பிரிட்டன் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
ஏற்கனவே விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வரும் பொருளாதாரம் கூடுதலாகக் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சீனா கொரோனா லாக்டவுன் அறிவிப்பு, தொடர்ந்து அதிகரித்து வரும் டாலர் ஆதிக்கம் ஆகியவை பிரிட்டனை நாட்டைப் பாடாய்ப் படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கோல்டு மேன் சாச்சஸ் இதர முக்கியமான காரணங்களை முன்வைத்து பிரிட்டன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவை மைனஸ் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளது.
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ்
பிரிட்டன் நாட்டின் பிரதமராக லிஸ் டிரஸ் நியமிக்கப்பட்ட பின்பு பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த முடிவிகள் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் எப்படியிருக்கும் எனக் கோல்டுமேன் சாச்சஸ் செய்த முந்தைய கணிப்பில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
முக்கியக் காரணங்கள்
பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் நியமிக்கப்பட்ட பின்பு சான்சிலர் பதவியில் இருந்து Kwasi Kwarteng நீக்கப்பட்டது, இருக்கமான நிதியியல் சூழ்நிலைகள், காப்பரேட் வரி மீது விதிக்கப்பட்டு இருந்த Freeze உத்தரவை நீக்கப்பட்டது மூலம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அதிகப்படியான கார்பரேஷன் வரி ஆகியவை பிரிட்டன் பொருளாதாரத்தை ரெசிஷனுக்குக் கட்டாயம் கொண்டு செல்லும் என முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாச்சஸ் தெரிவித்துள்ளது.
கோல்டுமேன் சாச்சஸ்
இதைத் தொடர்ந்து கோல்டுமேன் சாச்சஸ் அமைப்பு, பிரிட்டன் நாட்டின் 2023 ஆம் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி அளவு முன்பு 0.4 சதவீதமாக இருக்கும் எனக் கணித்து இருந்த நிலையில், தற்போது - 1 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
பணவீக்கம்
இதேபோல் 2023 ஆம் ஆண்டு இறுதியில் 3.3 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட பணவீக்க அளவு 3.1 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது அமெரிக்க முதலீட்டு வங்கியியல் நிறுவனமான கோல்டுமேன் சாச்சஸ்.
கார்பரேட் வரி
பிரிட்டன் பிரதமரான லிஸ் டிரஸ் முன்பு கார்பரேட் வரியை 19 சதவீதத்திலிருந்து மாற்றாமல் தொடர்ந்து Freeze செய்யப்படும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கார்பரேஷன் வரி 25 சதவீதம் வரை உயர்த்தப்படும் என அறிவித்து. இது பிரிட்டன் நிறுவனங்களின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications