பிரிட்டன், ஒரு காலத்தில் உலகின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து நாடு. ஆனால் BREXIT-க்கு பின்பு அதாவது ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த நாள் முதல் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் பாதிக்கப்பட்டது.
இதில் இருந்து மீண்டு வரும் வேளையில் கொரோனா பாதிப்பால் பிரிட்டன் பொருளாதாகம் தத்தளித்த போது, பிரிட்டன் அரசியலில் பெரிய தடுமாற்றம் இதில் ரிஷி சுனக் வென்று அந்நாட்டின் அதிபரானார். அங்கிருந்து ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் ஒட்டுமொத்த ஐரோப்பிய பொருளாதாரமும் மாட்டிக்கொண்டது.

இந்த நிலையில் தற்போது பிரிட்டன் நாட்டில் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியத்தில் மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் நாடாக ககுதப்படுகிறது. இதற்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை உயர்வு துரத்தி வருகிறது.
பிரிட்டன் நாட்டின் தனியார் நிறுவனங்கள் கொரோனா தொற்றுநோய் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனைக்கு பின்பு தற்போது அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்து தொழிலாளர்களை வெளியேற்றி வருகிறுது. இதனால் பிரிட்டன் நாட்டின் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரிட்டன் நாட்டில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக தங்களுடைய பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்துவதை நிறுத்துவதற்கான பேங்க் ஆப் இங்கிலாந்து முடிவை எடுக்க திட்டமிட்டு வருகிறது.
எஸ்&பி குளோபலின் composite Purchasing Managers' Index செப்டம்பர் மாதத்தில் 48.6 ஆக இருந்து 46.8 ஆக சரிந்தது, இது ஜனவரி 2021 இல் இங்கிலாந்து லாக்டவுனில் இருந்தபோது உற்பத்தியில் கூர்மையான சரிவடைந்த போது பதிவான அளவீட்டுக்கு பின்பு மோசமான அளவை தற்போது பதிவாகியுள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்த PMI குறியீட்டை விடவும் மோசமான நிலையை செப்டம்பர் மாதம் பாதிவாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து அந்நாட்டின் பெண்ச்மார்க் வட்டி விகிதங்களை 5.25% என்ற அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைக்கு வருவதே அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு சான்றாக உள்ளது.
இதேவேளையில் பிரிட்டன் நாட்டின் பொருளாதார வல்லுனர்கள், அந்நாட்டில் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இதை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications