வெள்ளிக்கிழமை பிரிட்டன் பிரதமரான லிஸ் ட்ரஸ், அந்நாட்டுக் கருவூலத்தின் அதிபர் அதாவது நிதியமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்க்-ஐ தனது பதவியில் இருந்து நீக்கினார்.
இது மட்டும் அல்லாமல் அதிகரித்து பணவீக்கம் மற்றும் சந்தை தடுமாற்றத்தைச் சமாளிப்பதற்கு அறிவிக்கப்பட்ட பொருளாதார தளர்வு திட்டங்களில் பலவற்றை ரத்து செய்தார்.
பிரிட்டன் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பிரெக்சிட
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பிரட்டன் தனியாக பிரிந்த நாளில் இருந்து பிரிட்டன் அரசு சரியான மற்றும் நிலையான பொருளாதார கொள்கை வரையறுக்க முடியாமல் உள்ளது. இதற்கிடையில் கோவிட் தொற்று, ரஷ்யா உக்ரைன் போர், பிரதமர் மாற்றம் போன்ற பல விஷயங்கள் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டு உள்ளது.
லிஸ் டிரஸ்
லிஸ் டிரஸ் பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதிவியேற்றிய நாளில் இருந்து எனர்ஜி விலை உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது, இதனால் போரிஸ் ஜான்சன்-யிடம் ஆட்சியை கைப்பற்றிய நாளில் இருந்து லிஸ் டிரெஸ்-ம் பிரிட்டன் மக்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்.
மினி பட்ஜெட்
இதற்கிடையில் லிஸ் டிரஸ் செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்த மினி பட்ஜெட் மக்கள் மத்தியிலும், முதலீட்டு சந்தையில் அதிப்படியான தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. இதேவேளையில் பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பாங்க் ஆப் இங்கிலாந்து பணவீக்க உயர்வால் பென்ஷன் துறையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
குவாசி குவார்டெங்க் பதவி நீக்கம்
இதை தொடர்ந்து பிரிட்டன் பிரதமரான லிஸ் டிரஸ் நிதியமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்க்-ஐ இப்பணியில் இருந்து நீக்கிவிட்டு
ஜெர்மி ஹன்ட்-ஐ நியமித்தார். இவர் முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக் ஆதாரவாளர், இந்த நியமனத்தின் மூலம் Conservative Party-யின் எதிர் தரப்பின் ஆதாரவையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
2 திட்டங்கள்
லிஸ் ட்ரஸ் - குவாசி குவார்டெங்க் கூட்டணி முதல் முறையாக அறிவித்த திட்டத்தில் 1,50,000 பவுண்டுக்கு அதிகமாக வருமானம் பெறுபவர்கள் மீது விதிக்கப்படும் 45 சதவீத வரியை நீக்கவும், கார்பரேட் வரியை 19 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை ரத்து செய்வது என இரு திட்டங்கள் அறிவித்தார்.
45 பில்லியன் பவுண்ட் இழப்பு
இவ்விரு திட்டங்கள் வாயிலாக மட்டும் பிரிட்டன் அரசுக்கு சுமார் 45 பில்லியன் பவுண்ட் வரையிலான வரி வருமானம் பாதிக்கப்படும். இந்த அறிவிப்பின் வீரியத்தை உணர்ந்த லிஸ் டிரஸ் அரசு இரண்டு அறிவிப்புகளையும் திரும்பப் பெற்றார். ஆனாலும் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்தும், பொருளாதாரத்தை மேம்படுத்த எவ்விதான திட்டத்தையும் லிஸ் டிரஸ் அறிவிக்காமல் உள்ளார்.
பொருளாதாரம்
லிஸ் ட்ரஸ் செயல்பாடுகள் மக்களுக்கும் சரி அந்நாட்டின் அரசுக்கும் சரி விரும்பாத நிலையில், பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்த போதுமான நடவடிக்கையை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியில் இருந்து ஜனவரி 2025 நடக்கும் பொது தேர்தலுக்கு முன்னதாகவே வெளியேற்றப்படலாம் என கருத்து நிலவுகிறது.
2022 கிறிஸ்மஸ்
இதேவேளையில் லிஸ் ட்ரஸ் கட்சியான Conservative Party-யின் சட்ட வல்லுனர்கள் மத்தியில் 2022 கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நீக்கிவிட்டு ரிஷி சுனக் மற்றும்
பென்னி மோர்டான்ட் கூட்டணியில் புதிய ஆட்சி அமைக்க உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications