இந்தியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. யு.கே-வில் வேலை தேட புதிய விசா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரெக்சிட்டில் இருந்து வெளியேறிய பிறகு யு.கே-வில் திறமையான பட்டதாரிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உலகின் டாப் சிறந்த பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகளுக்கு புதிய விசாவை யு.கே அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய விசாவை பயன்படுத்தி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயின்ற திறன் படைத்த பட்டதாரிகள் யு.கே சென்று வேலை தேட அனுமதிக்கப்படுவார்கள்.

அடிதூள்.. 0 பில்லியன் வருவாய்.. வரலற்று சாதனை படைத்த முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ்..! அடிதூள்.. 0 பில்லியன் வருவாய்.. வரலற்று சாதனை படைத்த முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ்..!

HPI விசா

HPI விசா

யு.கே சென்று வேலை தேட விரும்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்த பட்டதாரிகள் HPI என அழைக்கப்படும் உயர் திறன் கொண்ட தனிநபர் (HPI) விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறுகின்றனர்.

எளிய வழி

எளிய வழி

புதிய HPI விசாவிற்கு விண்ணப்பிப்பதன் மூலம் யுகேவில் எளிதாக வேலை தேடலாம். யு.கே நிறுவனங்களும் இந்த விசாவை பயன்படுத்தி ஊழியர்களை ஸ்பாஷர்ஷிப் கட்டணம் ஏதும் இல்லாமல் பணிக்கு எடுக்கலாம்.

யார் எல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
 

யார் எல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். எந்தெந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை Gov.uk இணையதளம் சென்று பார்க்கலாம். இந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் மாறும்.

ஆங்கிலம்

ஆங்கிலம்

தாய் மொழியில் பட்டம் பெற்று இருந்தால் B1 ஆங்கில தேர்வைத் தேர்ச்சி பெற்ற பிறகே விண்ணப்பிக்க முடியும். மேலும் வாங்கிய பட்டமானது யு.கே பல்கலைக்கழகங்களின் பாட திட்டங்களுக்கு இணையாக இருக்க வேண்டும்.

எவ்வளவு கட்டணம்?

எவ்வளவு கட்டணம்?

HPI விசாவிற்கு விண்ணப்பிக்க 715 யூரோ கட்டணமாகச் செலுத்த வேண்டும். வங்கி கணக்கில் குறைந்தது 28 நாட்களுக்கு 1270 யூரோ வைத்திருக்க வேண்டும்.

பட்டதாரி விசாவுக்கும் HPI-க்கும் என்ன வித்தியாசம்?

HPI வெளிநாட்டில் படித்த பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் விசா முறை. பட்டதாரி விசா யு.கே சென்று படிக்க வழங்கும் விசாவாகும்.

HPI விசா ஆயுட்காலம் எவ்வளவு?

HPI விசா ஆயுட்காலம் எவ்வளவு?

இளங்கலை பட்டதாரிகளுக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கும் இரண்டு ஆண்டு HPI விசா வழங்கப்படும். பி.எச்.டி படுத்துள்ளவர்களுக்கு 3 ஆண்டுகள் HPI விசா வழங்கப்படும்.

துணைகள்

துணைகள்

கணவன் அல்லது மனைவி மற்றும் 18 வயதுக்குள்ளான குழந்தைகளை அழைத்துச்செல்லலாம். திருமணம் ஆகாத துணை என்றால் சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

HPI விசா காலாவதியானால் நிரந்தர விசா கிடைக்குமா?

HPI விசா காலாவதியானால் நிரந்தர விசா கிடைக்குமா?

HPI விசா காலாவதியானால் நேரடியாக நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது. அதற்குப் பதிலாக skilled worker, start-up and innovator, exceptional talent அல்லது scale-up route விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK’s New High Potential Individual (HPI) visa for Talented Foreign University Graduates No Needs Any Job Offer

UK’s New High Potential Individual (HPI) visa for Talented Foreign University Graduates No Needs Any Job Offer | இந்தியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. யு.கே-வில் வேலை தேட புதிய விசா!
Story first published: Friday, May 6, 2022, 20:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X