சமுக வலைத்தள உலகின் கிங்மேக்கராக இருக்கும் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் சமீபத்தில் டிவிட்டருக்கு போட்டியாகவும், டிவிட்டரின் வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களை மொத்தமாக சுரண்ட வேண்டும் என இலக்குடன் டிவிட்டரின் டிசைன்-ஐ அப்படியே காப்பி அடித்து பட்டி டிங்கரிங் பார்த்து அறிமுகம் செய்த தளம் தான் த்ரெட்ஸ்.

த்ரெட்ஸ் அறிமுகமாகும் போது ஒட்டுமொத்த சமூகவலைத்தள சந்தையும் டிவிட்டர் நிலைமை இனி அதோகதி தான் என விமர்சனம் செய்த நிலையில், வந்த இடமும் போன தடமும் தெரியாமல் மாயமாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஆனாலும் தொடர்ந்து சில லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவைகளை அளித்து வரும் தருணத்தில் அதற்கும் ஆப்பு வைக்க முடிவு செய்துள்ளது பிரிட்டன் நாட்டு நிறுவனம்.
பிரிட்டன் நாட்டின் மென்பொருள் சேவை நிறுவனமான த்ரெட்ஸ் சாப்ட்வேர் லிமிடெட் மெட்டா நிறுவனம் தனது நிறுவனத்தை பயன்படுத்துவதாகவும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது. த்ரெட்ஸ் என்னும் பெயருக்கு பிரிட்டன் நாட்டில் பயன்படுத்த த்ரெட்ஸ் சாப்ட்வேர் லிமிடெட் ட்ரேட்மார்க் பெற்று இருக்கும் வேளையில் அடுத்த 30 நாட்களுக்குள் த்ரெடஸ் என்ற சொல்லை தனது சேவைகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்த அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு மத்தியில் த்ரெட்ஸ் சாப்ட்வேர் லிமிடெட் பிரிட்டன் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை தொடுத்து தடை உத்தரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. த்ரெட்ஸ் சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனம் த்ரெட்ஸ் என்பதற்கான டிரேட்மார்க் 2012 முதல் வைத்துள்ளது.
இந்த பெயரை இந்நிறுவனத்தின் intelligent messaging hub-க்கு த்ரெட்ஸ் சாப்ட்வேர் நிறுவனம் வைத்துள்ளது. இதில் தான் நிறுவனத்தின் ஈமெயில், டிவீட், வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரோடோகால் போன்கால்களை கிளவுட் டேட்டாபேஸ்-ல் சேமித்து வைத்துள்ளது.
இதற்கிடையில் த்ரெட்ஸ் சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து threads.app என டொமைன் பெயரை வாங்குவதற்காக மெட்டா நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் சுமார் 4 முறை இந்நிறுவனத்தை அணுகியுள்ளது. அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்த நிலையிலும் மெட்டா நிறுவனம் பிரிட்டன் நாட்டில் விதிகளை மீறி டிரேட்மார்க் உரிமையை மீறி த்ரெட்ஸ் என்ற பெயருடன் தனது செயலியை அறிமுகம் செய்துள்ளது.
நீதிமன்றத்தில் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தால் த்ரெட்ஸ் பெயரை மாற்றி கொண்டு பிரிட்டன் நாட்டில் இயங்க வேண்டும், அல்லது மெட்டா நிறுவன மற்றும் த்ரெட்ஸ் சாப்ட்வேர் மத்தியில் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்து முடிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications