நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தினசரி அடிப்படையில் ஒரு மோசடி சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. அதுவும் சமீபத்திய ஆண்டுகளில் இது மிகவும் சாதாரணமாகிவிட்டது. என்னதான் காவல்துறையினர் எச்சரித்தாலும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. பெரும்பாலான மோசடி சம்பவங்கள் அனைத்தும் ஒரு அழைப்பின் மூலமாகத்தான் தொடர்கிறது. முதலில் மோசடிக்காரர்கள் பாதிக்கப்படுபவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களிடம் பேச்சு கொடுத்து பின்னர் தங்கள் வலையில் விழ வைக்கின்றனர். இது போன்ற மோசடி அழைப்பாளர்களுடன் பேசுவதற்காக டெய்சி என்கிற AI பாட்டியை UK நிறுவனம் உருவாக்கியுள்ளது
மோசடி தொடர்பான அழைப்புகளை தடுப்பதற்காக UK தொலைத்தொடர்பு நிறுவனமான O2 ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெய்ஸி என்ற பாட்டியை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த AI பாட்டி மோசடி செய்பவர்களிடம் தொலைபேசியில் பேச்சுக் கொடுத்து போலியான குடும்ப கதைகள் மற்றும் நாடகங்கள் பற்றி பேசுவார். இதன் முக்கிய நோக்கமே மோசடி செய்பவர்களின் நேரத்தை வீணடிப்பது தான். அதோடு உண்மையான நபர்களை மோசடிக்கு பலியாகாமல் பாதுகாப்பதற்காக இந்த AI பாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்களுக்கு எதிராக O2 நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. அதிகரித்து வரும் மோசடி அழைப்புகளுக்கு எதிராக AI பாட்டி தொடர்ந்து பேச்சு கொடுக்கும். AI பாட்டி சாதாரண சேட் பாட் கிடையாது. மனிதனைப் போலவே பேச்சு கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் மேம்படுத்தப்பட்ட AI. மோசடிக்காரர்கள் பேசுவதற்கு ஏற்ப இந்த AI பாட்டி அவர்களுக்கு பதில் அளிக்கும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இவர் AI என்பது பேசுபவருக்கு தெரியாது.
டெய்ஸி உருவாக்கப்பட்டது ஏன்?: மோசடியில் பாதிக்கப்பட்ட 10 நபர்களில் 7 பேர் இந்த சம்பவத்தை நிகழ்த்திய மோசடிக்காரர்களை பழிவாங்க விரும்புகின்றனர். ஆனால் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நேரத்தை அதற்காக பயன்படுத்த விரும்புவதில்லை. இதன் காரணமாகத்தான் டெய்சி உருவாக்கப்பட்டது. ஏமாற்றும் அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்காகவும், மோசடி செய்பவர்களை 40 நிமிடங்கள் வரை பேச வைத்து அவர்களுடைய நேரத்தை வீணடிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. டெய்சி பாட்டி மோசடி செய்பவர்களை விரக்தி அடையச் செய்வது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் ஒரு நபரை ஏமாற்றுவதையும் தடுக்கிறது.

O2 நிறுவனம் ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கான மோசடி அழைப்புகளை பிளாக் செய்கிறது. அதோடு இந்த மோசடிகளை தடுப்பதற்காக ஒரு தேசிய பணி குழுவையும் அமைத்துள்ளது. இனிவரும் காலங்களில் AI பாட்டி மோசடிக்காரர்களை ஓட ஓட விரட்டுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. UK மட்டுமல்லாமல் உலகெங்கிலும் டெய்சி பாட்டியை கொண்டு வந்தால் இனி வரும் காலங்களில் எந்தவித நிதி இழப்பும் ஏற்படாமல் இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications