இந்தியர்களுக்கு சிக்கல்..ஷாக் தந்த ரிஷி சுனக்.. இனி யூகே செல்வது கடினம்தான்!

லண்டன்: யூகேவில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கான விசா கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் ரிஷி சுனக் அரசாங்கம், மற்ற ஊர்களில் இருந்து அந்நாட்டிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் மட்டும், 7,45,000 மக்கள், இந்நாட்டிற்கு புலம்பெயர்ந்து உள்ளனர் என்று அந்நாட்டின் அதிபர் சுனக் கூறியுள்ளார். இந்தியாவில் இருக்கும் திறமையானவர்களுக்கான வேலை விசா, 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் £13,380 ஆக இருந்தது. 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் £21,837 ஆக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 63 சதவீத அதிகரிப்பை காட்டுகிறது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்தியர்களுக்கு சிக்கல்..ஷாக் தந்த ரிஷி சுனக்.. இனி யூகே செல்வது கடினம்தான்!

UK விசா விண்ணப்பதாரர் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளம் என்ன?

யுகேவில் பணிபுரிய தேவைப்படும் சிறப்பு திறன் பணியாளர் விசாவை பெறுவதற்கான ஆண்டு சம்பளமாக ஒவ்வொரு நபரும் £26,200 பவுண்டு வாங்க வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறி இருந்தது. அதாவது இது இந்திய ரூபாயில் சுமார் 27 லட்ச ரூபாய் ஆகும். தற்போது இந்த சம்பளம் £38,700 பவுண்டாக மாற்றப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 50 சதவீத உயர்வை காட்டுகிறது.

புதிய விதிமுறை சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத் துறையில் உள்ளவர்களுக்குப் பொருந்தாது என்றாலும், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது.

கடந்த ஜூன் 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 70,000 குடும்பங்கள் ஃபேமிலி விசாக்களை பயன்படுத்தி UK விற்கு வந்துள்ளனர். ஃபேமிலி விசா பெறுவதற்கான தொகை £18,600 லிருந்து £38,700 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த புதிய விதிகள் பல குடும்பங்களை பிரிப்பதாக எழுந்த புகாருக்குப்பின், இதன் கட்டணம் £29,000ஆக குறைக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இந்தத் தொகையானது முதலில் £34,500 ஆகவும் பின்னர் £38,700 ஆகவும் உயர்த்தப்படும் என்று சுனக் கூறினார். மேலும், இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள குடும்ப விசாவைப் புதுப்பிக்கும் எவரும் புதிய சம்பளத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என்று அந்நாட்டின் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு வேலை செய்யும் பராமரிப்பு பணியாளர்கள் தங்களது குடும்பங்களை யூ கே விற்கு அழைத்து வர முடியாது. பராமரிப்பு பணியாளர்களின், குடும்பங்களால் யூகே விற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அந்நாட்டின் உள்துறை அலுவலக தரவுகள் கூறுகின்றன.

புதிய திட்டத்தினால் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல் என்ன?: யுகே வில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருக்க பட்டதாரி விசா அனுமதிக்கிறது. இதனை தவறாக சிலர் பயன்படுத்துவதால், அதனை ஆய்வு செய்ய உள்ளோம் என யூகே அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்கு படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோரை அழைத்து வருவதை குறைக்கும் திட்டங்களையும் செயல்படுத்த உள்ளதாக அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் படிப்பை முடிக்கும் முன்னரே வேலை செய்வதற்கான ஒர்க் விசா பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+