உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் அரசு வேலை என்றால் நிரந்தர வேலை என்று எண்ணிக் கொண்டிருந்த பலருக்கு தற்போது இடி விழும் வகையில் 2 லட்சம் அரசு ஊழியர்களை நீக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் பிரிட்டன் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் லிஸ் ட்ரஸ்
பிரிட்டன் புதிய பிரதமராக சமீபத்தில் லிஸ் ட்ரஸ் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக 2 லட்சம் அரசாங்க ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேலைநீக்கம்
பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபிஸ்கல் ஸ்டடீஸ் (IFS)என்ற அமைப்பு பிரிட்டனை கடனில் இருந்து மீட்க அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பள அதிகரிப்பு
பிரிட்டனை பொருத்தவரை பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் இந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், தற்போதைய பணவீக்கம் காரணமாக சம்பள அதிகரிப்பு இருக்குமா? என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது
பட்ஜெட்
இந்த நிலையில் விரைவில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் 5 பில்லியன் பவுண்டுகள் சேமிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டன் கருவூல அதிபர் குவாசி குவார்டெங் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பிரிட்டன் அரசுக்கான செலவுகளை கணிசமாக குறைக்க திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசாங்க ஊழியர்களை வேலை நீக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
2 லட்சம் ஊழியர்கள்
இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும் அதே போல் மற்ற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது என்றும் கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டிலும் பணவீக்கம் அதிகரித்தால் அடுத்த ஆண்டும் ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் வேலை நீக்கம் இருக்கும் என்றும் மொத்தம் 2 ஆண்டுகளில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள்
வேலை நீக்கம் செய்யப்படுபவர்களில் செவிலியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோர்கள் அதிக அளவில் என கூறப்படுவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications