ஒரு சில மாதங்களுக்கு முன் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு பணி நீக்கம் செய்தனர். அப்படி பணி நீக்கம் செய்யக்கூடிய நிறுவனங்களின் தரப்பில் இருந்து அதற்கான காரணமும் வெளியிடப்பட்டது. ஆனால் UK-வைச் இருந்த ஒரு நிறுவனம் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்ததற்காக ஒரு பெண் ஊழியரை பணிநீக்கம் செய்தது. இந்நிலையில் நுகர்வோர் நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. வேலை இழந்த அந்தப் பெண்ணுக்கு இந்திய மதிப்பில் 32,20,818 ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில் மேக்சிமஸ் யுகே சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த எலிசபெத் பெனாசி, தான் அணியும் காலனிகள் குறித்து கிண்டலுக்கு உள்ளானதாகவும், தன்னை அங்கு உள்ளவர்கள் குழந்தை போல நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

எலிசபெத் இந்நிறுவனத்தில் சேரும்போது அவருக்கு வயது 18. தனது ஸ்லிப்பர்கள் குறித்த அவ்வப்போது சர்ச்சைக்கு உள்ளான எலிசபத்தை மேலாளரும் விமர்சித்ததை எடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரோவின் கூற்றுப்படி எலிசபெத் பெனாசி தனக்கு எந்தவிதமான ஆடையணியும் விதிமுறைகள் தெரியவில்லை என்றும், தனது பணி நீக்கம் மிகவும் அபத்தமான செயல் என்றும் வாதிட்டார்.
லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள க்ரொய்டனில் நடைபெற்ற விசாரணையில் இளம் ஊழியரிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே நிறுவனம் நடந்து கொண்டது தெரியவந்தது. மேக்ஸிமஸ் யுகே சர்வீசஸ் என்ற நிறுவனம் ஓய்வூதியதாரர்களுக்கு சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். எலிசபெத் பெனாசியை 3 மாதங்களுக்கு மட்டுமே பணியமர்த்தி அதன் பிறகு நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. விசாரணையின் போது சக ஊழியர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதும், பெனாசி அவர்களை விட இளைய ஊழியர் என்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான பார்வெல் எலிசபெத் பேசினா நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக கூறினார். மேலும் அவர் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் என்பதால் ஆடை கட்டுப்பாடு குறித்து அவர் அறிந்திருக்கவில்லை என்பதையும் கூறி நிறுவனத்திடம் ரூ.32 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கு பணிபுரியும் அலுவலகங்களில் நியாயமான நடத்தை மற்றும் தெளிவான தகவல் பரிமாற்றம் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications