ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் குறையாத நிலையில் உக்ரைன் நாட்டின் வர்த்தகமும், பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்த நிலையில் விமான என்ஜின்கள் மற்றும் தொழில்துறை டர்பைன்-களை உற்பத்தி நிறுவனமான மோரர் சிச்-ன் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் வியாசெஸ்லாவ் போகஸ்லேவ் சனிக்கிழமையன்று உக்ரைன் ராணுவ அதிகாரிகளால் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளது.
இது உக்ரைன் தொழிற்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாசெஸ்லாவ் போகஸ்லேவ்
மோரர் சிச்-ன் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் வியாசெஸ்லாவ் போகஸ்லேவ் வயது 83. இவர் உக்ரைன் நாட்டின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் அதிகரித்து வர பலவேறு நடவடிக்கைகளை உக்ரைன் எடுத்தது.
ரஷ்யா
இதில் முக்கியமாக ரஷ்யாவுக்கும், ரஷ்யாவின் போருக்கு ஆதரவாக இருக்கும் பல உக்ரைனியர்களைக் கட்டம் கட்டி கண்காணித்து வந்தது. அப்படி உக்ரைன் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டிற்குள் இருந்த அவர் தான் மோரர் சிச்-ன் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் வியாசெஸ்லாவ் போகஸ்லேவ்.
இன்ஜின்
ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த காரணத்தாலும், உக்ரைன் மற்றும் உலக நாடுகளின் தடையை மீறி ரஷ்ய ராணுவத்திற்கு இன்ஜின் வழங்கிய காரணத்திற்காகவும், தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கைது
உக்ரைன் நாட்டின் Zaporizhzhia நகரத்தில் இருக்கும் தனது வீட்டில் தங்கியிருந்த 83 வயதான வியாசெஸ்லாவ் போகஸ்லேவ், ராணுவ அதிகாரிகள் தனது வீட்டிற்குள் சோதனை செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில், ராணுவ அதிகாரிகள் கதவை உடைத்து கைது செய்துள்ளனர்.
விக்டர் மெட்வெட்சுக்
வியாசெஸ்லாவ் போகஸ்லேவ்-க்கு முன்பு அரசியல்வாதியும் தொழிலதிபருமான விக்டர் மெட்வெட்சுக் (Viktor Medvedchuk) இதேபோல் ரஷ்ய தொடர்பு இருப்பதாகக் கூறி மாஸ்கோவிற்குத் தப்பிச் செல்ல முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications