ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்பு தீவிரமடைந்துள்ளது, குறிப்பாகப் புதிதாக அமையவிருக்கும் டிரம்ப் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் முடிவோடு, அடுத்த சில வாரத்தில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ பைடன் அரசு உக்ரைன்-க்கு கொடுத்த ஒறு அனுமதி தற்போது மீண்டும் மாபெரும் போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் என்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் ராணுவம் அமெரிக்கா வழங்கிய ATACMS என்ற தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவின் பிரியான்ஸ்க் (Bryansk) பகுதியைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்கப் பங்குச்சந்தையிலும், சர்வதேச முதலீட்டுச் சந்தையிலும் எதிரொலிக்கும், அதிர்ஷ்டவசமாக நாளை இந்தியப் பங்குச்சந்தை மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் உக்ரைன் தாக்குதல் மூலம் ஏற்படும் பாதிப்பு புதன்கிழமை தான் எதிரொலிக்கும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு நேற்று, அமெரிக்க அரசு வழங்கிய ATACMS ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்த அனுமதி அளித்த 24 மணிநேரத்தில் உக்ரைன் தனது தாக்குதலைத் துவங்கியுள்ளது. உக்ரைன் ராணுவம் சுமார் 6 ஏவுகணைகளை பிரியான்ஸ்க் (Bryansk) பகுதியை டார்கெட் செய்து தாக்கியுள்ளது.
ரஷ்யா தனது எதிர் தாக்குதலின் மூலம் 5 ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றொன்றை அழித்ததாகவும் தெரிவித்துள்ளது. ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இதன் பாகங்கள் பிரியான்ஸ்க் (Bryansk) பகுதியில் விழுந்ததில் சில இடத்தில் தீ விபத்து நடந்தது, ஆனால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் ரஷ்யா அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ராணுவம் 6 ATACMS ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலை நடத்தியதை ஒப்புக்கொண்டதுடன், பிரியான்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு இராணுவ ஆயுத கிடங்கை தாக்கியதாகத் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் அச்சம் மீண்டும் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.
அமெரிக்கா உக்ரைனுக்கு தனது ATACMS ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்க அடிப்படை காரணமாக இருந்தது ரஷ்யாவின் இந்த ஒரு செயல்பாடு தான்.
ரஷ்ய அதிபர் புட்டின் வட கொரியாவின் ராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் மேற்கு எல்லையில் நிலை நிறுத்தி, பல புதிய பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சிகளைக் கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டதோடு, எந்த நேரமும் உக்ரைன் மீது பெரும் தாக்குதலை ரஷ்யா நடத்தும் நிலை உருவானது. இதன் காரணமாகவே அமெரிக்கா ATACMS ஏவுகணைகளைப் பயன்படுத்தி, ரஷ்யாவின் முக்கிய பகுதிகளைத் தாக்கும் அனுமதியைக் கொடுத்தது.
அமெரிக்காவின் புதிய அனுமதியால் ரஷ்யா - உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் ரஷ்யாவின் அணு ஆயுத கொள்கையைத் திருத்தியமைத்துள்ளார்.
இந்த புதிய திருத்தத்தின் படி, அணு ஆயுத சக்தி கொண்ட எந்தொரு நாடும் ரஷ்யா மீது தாக்குதலை நடத்தினால், அது ரஷ்யாவுக்கு எதிரான கூட்டுத் தாக்குதலாகக் கருதப்படும் எனத் திருத்தப்பட்டு உள்ளது. இது அணு ஆயுத தாக்குதல் ஆபத்தை அதிகரிக்கும் நிலையை குறிக்கிறது.
இந்த நிலையில் தான் மாலை உக்ரைன் ராணுவம் அமெரிக்கா கொடுத்த ATACMS ஏவுகணைகளைப் பயன்படுத்தி Bryansk பகுதியைத் தாக்கியுள்ளது. இதனால் புடின் முடிவு என்னவாக இருக்கும் என்பது அடுத்த முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications