ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் தொடர்ந்து நீட்டித்து வரும் நிலையில் உக்ரைன் சில நாட்களுக்கு முன்பும் மீண்டும் NATO அமைப்பில் சேர விண்ணப்பித்துள்ளது.
ஏற்கனவே உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உதவி செய்து வரும் நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்த அறிவிப்பு ரஷ்யா-வுக்குப் பாதகமாக அமைந்துள்ளது.
IMF அமைப்பு
சர்வதேச நாணய நிதியம் அமைப்பான IMF வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைன் நாடு அவசர நிதியாகக் கோரியிருந்த 1.3 பில்லியன் டாலர் நிதியுதவிக்கு IMF நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிதியுதவி
உக்ரைன் நாட்டின் கோரிக்கையில் ரஷ்யாவுடன் போரிட்டு வரும் நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்த நிதியுதவி வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தது. இந்த நிதியுதவி உக்ரைன் நாட்டில் நிலவு உணவு பற்றாக்குறையைச் சமாளிக்க அவரது நிதி திட்டத்தின் கீழ் தற்போது 1.3 பில்லியன் டாலர் அளவிலான கடனை அளிக்க IMF நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
ஜிடிபி -35 சதவீதம் வரை சரிவு
பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொட்டு பின்ரு உக்ரைன் நாட்டில் அதிகப்படியான உயிரிழப்பு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் உருவாகியுள்ளது. இதன் மூலம் 2022ல் உக்ரைன் நாட்டின் ஜிடிபி -35 சதவீதம் வரையில் செல்லும் நிலை உள்ளது.
உக்ரைன் அதிபர்
இந்த நிதியுதவிக்காக உக்ரைன் நாட்டின் அதிபர் Volodymyr Zelenskiy ஐஎம்எப் அமைப்பிற்கு நன்றி கூறினார். உக்ரைன் நாட்டின் கோட்டாவில் இருந்து 50 சதவீத தொகை தற்போது ரேபிட் பைனான்சிங் வாயிலாக அளிக்கப்பட்டு உள்ளது.
கடனுக்கான பேமெண்ட்
இந்த நிதி உதவி உணவு பற்றாக்குறை போக்குவது மட்டும் அல்லாமல் ஏற்கனவே வாங்கிய கடனுக்கான பேமெண்ட்-ஐ செலுத்த உதவும் என IMF அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா பணமாகவும், ஆயுதமாகவும் அதிகளவில் உதவி செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications