ரஷ்யா உக்ரைன் போர் இரு நாடுகள் மத்தியில் மட்டுமே நடந்தாலும் இதில் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பின்னிபிணைந்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் ஒன்று சேர்ந்தாலும் ரஷ்யா தொடர்ந்து கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. சமீபத்தில் ரஷ்யா - அமெரிக்கா மத்தியில் செய்யப்பட்ட அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். இந்தப் பதற்றமான சூழ்நிலையில் தான் ரஷ்யா உக்ரைன் போர் துவங்கி ஒரு ஆண்டு முழுமையாக முடிந்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மத்திய வங்கியான National Bank of Ukraine வியாழன் அன்று ரஷ்யாவின் படையெடுப்பின் ஒரு வருடத்தை நினைவுகூரும் வகையில் புதிய கரன்சி நோட்டை அறிமுகப்படுத்தியது. ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் மற்றும் உக்ரைனின் வெற்றியை சித்தரிக்கும் குறிப்புகளைக் கொண்ட புதிய கரன்சி நோட்டுகளை அடுத்தடுத்து வெளியிட உக்ரைன் மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.
இதேவேளையில் ரஷ்யா உக்ரைன் மத்தியில் பதற்றமான சூழ்நிலை தொடரும் வேளையில் அமெரிக்க அரசு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
உக்ரைன்
உக்ரைன் நாட்டின் மத்திய வங்கியான National Bank of Ukraine வியாழன் வெளியிட்ட 20-ஹ்ரிவ்னியா நோட்டின் ஒரு பக்கம் மூன்று வீரர்கள் அந்நாட்டு தேசிய கொடியை உயர்த்தும் படம் கொண்டு உள்ளது. மறுபுறம் இரண்டு கைகளில் டேப்பால் கட்டப்பட்டிருக்கும் படம் உள்ளது, இது உக்ரைனில் ரஷ்யப் படைகள் போர்க்குற்றங்கள் செய்ததும், இதன் பின் ரஷ்ய படைகள் சரண் அடைந்ததை குறிப்பிடுவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
Hryvnia நாணயம்
Hryvnia என்பது உக்ரைன் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாகும், ஒரு Hryvnia 2.25 ரூபாய்க்குச் சமம், இதேபோல் அமெரிக்கா டாலருக்கு எதிரான மதிப்பில் 26.76 Hryvnia. தற்போது உக்ரைன் ஒரு ஆண்டுப் போர் காலத்தை நினைவுக்கூறும் வகையில் 20 Hryvnia நோட்டில் புதிய புகைப்படங்கள் கொண்டு வெளியிடப்பட்டு உள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போர்
உக்ரைன் - ரஷ்ய போரின் ஒரு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஒரு வருடத்தின் உணர்வுகள், வடிவங்கள் மற்றும் சின்னச் சின்ன விஷயங்களைச் சித்தரிக்கும் நினைவுகளைப் பணத்தாளில் அச்சிட்டு வெளியிட முடிவு செய்தோம் என்று உக்ரைன் நேஷனல் பேங் கவர்னர் Andriy Pyshnyy தெரிவித்துள்ளார்.
3,00,000 நோட்டுகள்
புதிய நோட்டில் புதுமையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாகவும், மேலும் இப்புதிய 20-ஹ்ரிவ்னியா 3,00,000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் என்றும் பிஷ்னி கூறினார். உக்ரைனின் மத்திய வங்கி அதிகாரிகளின் கூறிய படி இந்தப் புதிய 20-ஹ்ரிவ்னியா நோட்டை வடிவமைத்துத் தயாரிக்கச் சுமார் எட்டு மாதங்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் வெற்றி
போரின் புகைப்படங்கள் கொண்டு புதிய ஹ்ரிவ்னியா நோட்டுகளை வெளியிட வங்கி தொடர் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. உக்ரைனின் வெற்றி மற்றும் புனரமைப்பு நினைவாகவே அந்நாட்டு மத்திய வங்கி புதிய நோட்டுகளைத் வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இதன் மூலம் அடுத்தடுத்து புதிய ஹ்ரிவ்னியா நோட்டுகள் வெளியிடலாம்.
30 பில்லியன் டாலர்
உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நிதியுதவியைச் செய்து வருவதால் அந்நாட்டின் நாணய இருப்பாகச் சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது. இது போர் துவங்குவதற்கு முந்தைய அளவீட்டை காட்டிலும் அதிகமானது.


Click it and Unblock the Notifications