ரஷ்யா - உக்ரைன் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வலுவான தலைமையின் கீழ் இணைந்து வேலை செய்ய தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, முதல் கட்டமாக கைதிகளை விடுவிப்பது, வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல் உள்ளிட்டவற்றை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "வெள்ளை மாளிகையில் நடந்த எங்கள் சந்திப்பில் ஏற்பட்ட வாக்குவாதம் வருந்தத்தக்கது என்று கூறினார். உக்ரைனின் அமைதிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜெலென்ஸ்கி, தனது இராணுவத்திற்கான ஜாவலின் டாங்கி ஏவுகணைகளை வழங்கியதற்காக டிரம்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டிய நேரம் இது என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

நாங்கள் யாரும் முடிவில்லாத போரை விரும்பவில்லை. உக்ரைன், நீடித்த அமைதியை நெருக்கமாகக் கொண்டுவர விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக உள்ளது. உக்ரைனியர்களைவிட வேறு யாரும் அமைதியை விரும்பவில்லை. நீடித்த அமைதியைப் பெற அதிபர் ட்ரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்ற நானும் எனது குழுவும் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கிடையே பதற்றத்தை குறைக்கும் வகையில், ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீதான பிற தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன்படி, முதல் கட்டமாக கைதிகளை விடுவிப்பது மற்றும் வான்வழி தாக்குதல் நிறுத்தம், ஏவுகணைகள், நீண்ட தூர ட்ரோன்கள், எரிசக்தி மீதான குண்டு வீச்சுகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். இதேபோல் கடலில் உடனடி அமைதியை ஏற்படுத்த வேண்டும். எனவே, ரஷ்யாவும் இதே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அப்படியென்றால், அடுத்த கட்டங்கள் அனைத்தையும் மிக வேகமாகக் கடந்து, வலுவான இறுதி ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க உதவிக்கு நன்றி: உக்ரைனின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் தக்க வைத்துக் கொள்ள அமெரிக்கா எவ்வளவு உதவி செய்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அதனை மதிக்கிறோம். அதிபர் டிரம்ப் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியதை நாங்கள் நினைவில் கொள்கிறோம். இதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் வாஷிங்டனில் நடந்த எங்கள் சந்திப்பு, நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை. இப்படி நடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. அதனை சரி வேண்டிய நேரமிது. எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் இருநாட்டு தகவல்தொடர்பு ஆக்கபூர்வமானதாக இருக்க விரும்புகிறோம். எனவே, உக்ரைன் எந்த நேரத்திலும் கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக உள்ளது. உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்யும் ஒரு படியாகவே நாங்கள் அதைப் பார்க்கிறோம். அது எங்களுக்கு பலன் தரும் என நம்புகிறோம் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications