உலகின் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளன. இதில் ஆரக்கிள் மற்றும் சாப் எஸ்.இ உள்பட பல நிறுவனங்களும் தங்களது செயல்பாடுகளை இடை நிறுத்தியுள்ளன.
இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் (Infosys Ltd) நிறுவனமும், ரஷ்யாவிலிருந்து தனது வணிகத்தினை வெளியேற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது உக்ரைன் - ரஷ்யா மோதலின் காரணமாக ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாகவும் கூறப்படுகின்றது.
டெக் ஜாம்பவான்கள் தடை
சமீபத்தில் ஐபிஎம் நிறுவனம் தனது வணிகத்தினை ரஷ்யாவில் தடை செய்வதாக அறிவித்தது. இதே போல மைக்ரோ சாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களும் தங்களது எதிர்ப்பினை காட்டும் விதமாக விற்பனையை நிறுத்தியுள்ளன. சோனி நிறுவனமும் தங்களது சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் ஏற்றுமதியினை நிறுத்தியுள்ளது.
கூகுளின் தடை
இதேபோல PlayStation Storeம் தனது செயல்பாட்டினை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் சேவையையும் இடை நிறுத்தியுள்ளது. மேலும் அதன் ப்யூச்சர் திட்டங்களையும் இடை நிறுத்தம் செய்துள்ளது.
இதேபோல கூகுள் நிறுவனமும் தனது தேடல் மற்றும் யூடியூப் தயாரிப்புகள் உட்பட பலவற்றிலும் விளம்பரங்களை தடை செய்துள்ளது.
மைக்கேல் மிஷுஸ்டின் வேண்டுகோள்
மேலும் ரஷ்யர்களின் யூடியூப் சேனல்களையும் இடை நிறுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ரஷ்யாவின் பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின், முன்னதாக அன்னிய நிறுவனங்கள் தங்களது வணிகத்தினை ரஷ்யாவில் தொடர அனுமதிக்க வேண்டும். ரஷ்யர்களின் வேலைகளை பராமரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
இது தான் காரணமா?
உக்ரைன் போருக்கு எதிராக தனது வணிகத்தினை விட்டு வெளியேறுவதாக இன்ஃபோசிஸ் தரப்பில் கூறப்பட்டாலும், சமீபத்தியில் ரிஷி சுனக்கிடம் இன்ஃபோசிஸ் மற்றும் அவரது மனைவியின் பங்கு குறித்து ஸ்கை நியூஸ்-ல் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.இதுவும் காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷி சுனக்கிடம் கேள்வி
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். அவருக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் உண்டு. ரஷ்யா உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய பணக்காரர்கள் மீது பிரிட்டிஷ் அரசு தடைகளை விதிக்க முயன்ற நிலையில், ரஷ்யாவுடன் உங்கள் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது. உங்கள் மனைவிக்கு இந்திய நிறுவனமான இன்ஃபோசிஸில் பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ரஷ்யாவில் செயல்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு அலுவலகமும் உண்டு, அவர்கள் மாஸ்கோவின் உள்ள ஆல்பா வங்கியுடன் தொடர்பில் உள்ளனர். நீங்கள் பின்பற்றாத விஷயங்கள் குறித்து, மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறீர்களா? என்ற கேள்வியும் சுனக்கிடம் கேட்கப்பட்டது.
நான் ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதி
அதற்கு பதிலளித்த சுனக், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரிட்டீஸ் அரசியல்வாதி, எனவே, எனக்கு எந்த பொறுப்பு உள்ளதோ? அது குறித்தே நான் பேச வந்துள்ளேன். என் மனைவி இங்கு பேச வரவில்லை என்று கூறியிருந்தார். இவ்வாறு பேசப்பட்ட நிலையில் சில வாரங்களில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது சற்று சந்தேகத்தினையும் கிளப்பியுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications