இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 3 ஆம் தேதி கூடுதல் நாணய கொள்கை கூட்டத்தை ஆர்பிஐ சட்டம் 45ZN பிரிவின் கீழ் நடக்கிறது. அதாவது பணவீக்கத்தைக் குறைக்க முடியாமல் தோல்வி அடைந்த காரணத்தால் ஆர்பிஐ சட்டம் 45ZN பிரிவின் கீழ் இக்கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்குப் பணவீக்கத்தைக் குறைக்க முடியாமல் தோல்வி அடைந்த நிலையில், இதற்கான விளக்க அறிக்கையை அளிக்க உள்ளது. இதோடு இக்கூட்டத்தில் பணவீக்கத்தைக் குறைக்க எடுக்கப்படும் தேவையான நடவடிக்கைகள் பற்றியும் விளக்கம் கொடுக்கும்.
சில்லறை பணவீக்கம்
2022ல் சுமார் 9 மாதம் அதாவது 3 காலாண்டில் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஆர்பிஐ-யின் 6 சதவீத இலக்கிற்கு அதிகமாகவே உள்ளது. செப்டம்பர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.4 சதவீதமாக இருந்தது. ஆர்பிஐ பணவீக்க இலக்கு 4-6 சதவீதமாகும், கொரோனாவுக்கு முன்பு சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்குக் கீழ் இருந்தது.
ரிசர்வ் வங்கி
இன்றைய கூட்டத்தில் சில்லறை பணவீக்கத்தை 6 சதவீதத்திற்குக் கீழ் கொண்டு வருவதற்கான ப்ளூபிரின்ட் வெளியிட முடிவு செய்தது. இதற்காக ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு இன்று கூடிய நிலையில் முக்கியமான விவாதம் மற்றும் ஆலோசனைகள் துவங்கியுள்ளது.
நாணய கொள்கை குழு கூட்டம்
இன்றைய கூட்டத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கத்தை ஏன் 4-6 சதவீத இலக்கிற்குள் வைக்க முடியவில்லை என்பதற்கான விளக்கத்தை மத்திய அரசிடம் கொடுக்க உள்ளது ஆர்பிஐ. மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்க இருக்கும் விளக்க அறிக்கையை வெளியிடப்படமாட்டாது.
45ZN பிரிவு சட்டம்
45ZN பிரிவின் கீழ் ஆர்பிஐ கூட்டம் மத்திய அரசுக்கு விளக்க அறிக்கை சமர்ப்பிப்பது மட்டுமே, மத்திய அரசுக்கு கொடுத்த விளக்க அறிக்கையை வெளியிடுவது கட்டாயம் இல்லை. இந்த அறிக்கையில் உக்ரைன் தான் முக்கியக் காரணமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
உக்ரைன் போர்
இந்தியாவின் பணவீக்கம் கடந்த 9 மாதத்தில் அதன் இலக்கை அடைய முடியாமல் இருக்க உக்ரைன் போர்-ஐ முக்கியக் காரணமாக அறிவிக்க வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது, இதன் பின் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவின் பணவீக்கத்தைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.
ஜப்பான் முதல் அமெரிக்க வரை
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு உலக நாடுகளில் பணவீக்கம் அதிகமாகியிருக்கும் காரணத்தால் ஜப்பான் மத்திய வங்கியில் இருந்து அமெரிக்க மத்திய வங்கி வரையில் பெரும்பாலான நாடுகள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. வட்டி விகிதத்தை உயர்த்த மிகவும் முக்கியமான காரணம் பணவீக்கம் மட்டுமே.
பற்றாக்குறை
இதற்கிடையில் உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடை, வர்த்தகத் தடை, பணப் பரிமாற்ற தடை உத்தரவுகள் மூலம் கச்சா எண்ணெய் முதல் சமையல் எண்ணெய் வரையில் கோதுமை முதல் ஸ்டீல் வரையில் சப்ளை செயின் பாதிப்பால் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து பிரிட்டன்
நவம்பர் 2 ஆம் தேதி நடந்து முடிந்த அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தில் பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடியே அமெரிக்காவின் பென்ச்மார்க் வட்டி விகிதம் 0.75 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து பாங்க் ஆப் இங்கிலாந்தும் இன்று 0.75 வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications