இங்கிலாந்தை ஆட்டிப்படைக்கும் இந்தியர்.. கோபிசந்த் இந்துஜா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

சர்வதேச கூட்டு நிறுவனமான இந்துஜா குழுமம், வாகனம், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், எண்ணெய் மற்றும் சிறப்பு ரசாயனங்கள் என பல்வேறு வணிகங்களில் கொடி கட்டி பறக்கிறது. கோபிசந்த் இந்துஜா தலைமையில் இந்துஜா சகோதரர்கள் இந்த குழுமத்தின் வணிக சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள், இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

மீண்டும் முதலிடம்
சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள, 2025ம் ஆண்டுக்கான இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், கோபிசந்த் இந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.33 லட்சம் கோடி நிகர சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் டேவிட் மற்றும் சைமன் ரூபன் மற்றும் குடும்பத்தினர் இரண்டாவது தள்ளப்பட்டனர். இந்துஜா குடும்பத்தினருடன் ஒப்பிடுகையில் ரூபன் குடும்பத்தினர் சொத்து மதிப்பு ரூ.8,042 கோடி மட்டுமே குறைவாகும்.

இங்கிலாந்தை ஆட்டிப்படைக்கும் இந்தியர்.. கோபிசந்த் இந்துஜா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

கோபிசந்த் இந்துஜா குடும்பத்தின் சொத்து மதிப்பு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவில் குறைந்துள்ள போதிலும், கோபிசந்த் இந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரர்கள் என்ற மகுடத்தை கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை
கோபிசந்த் தனது மூத்த சகோதாரர் ஸ்ரீசந்த் இந்துஜாவின் மரணத்தை தொடர்ந்து 2023 மே மாதத்தில் குழுமத்தின் தலைவர் பதவியை ஏற்றார். 1959ல் மும்பையின் ஜெய் ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து கவுரவ சட்ட முனைவர் பட்டத்தையும், லண்டனில் உள்ள ரிச்மண்ட் கல்லூரியில் இருந்து பொருளாதார கவுரவ முனைவர் பட்டத்தையும் பெற்றதாக தகவல்.

பன்னாட்டு நிறுவனமான இந்துஜா குழுமத்தை நிர்வகிக்கும் செல்வாக்கு மிக்க இந்துஜா குடும்பத்தில் கோபிசந்த் இந்துஜா ஒரு முக்கிய நபராக உள்ளார். கோபிசந்த லண்டனில் வசிக்கிறார், அவரது தம்பி பிரகாஷ் மொனாக்கோவில் வசிக்கிறார். அவர்களது இளைய சகோதரர் அசோக் மும்பையில் இருந்து இந்தியாவில் உள்ள தங்களது வணிகங்களை நிர்வகித்து வருகிறார்.

அசோக் லேலண்ட்
கோபிசந்த் தலைமையின் கீழ், இந்துஜா குழுமம் 1984ல் கல்ஃப் ஆயிலை கையகப்படுத்தியது, 3 ஆண்டுகளுக்கு பிறகு அசோக் லேலண்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இது இந்தியாவில் முதல் குறிப்பிடத்தக்க வெளிநாடு வாழ் இந்தியர் தலைமையிலான முதலீடாகும். இந்துஜா குடும்பத்துக்கு லண்டனில் குறிப்பிடத்தக்க ரியல் எஸ்டேட் சொத்துக்கள் உள்ளன. அவற்றில் ஒயிட்ஹாலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழைய போர் அலுவலக கட்டிடத்தில் அமைந்துள்ள ராஃபிள்ஸ் லண்டன் ஹோட்டலும் அடங்கும்.

இந்த பன்முகத்தன்மை கொண்ட இந்நிறுவனம் லாரிகள், லூப்ரிகண்டுகள், வங்கி மற்றும் கேபிள் தொலைக்காட்சி போன்ற தொழில்களை மேற்கொண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+