சென்னை: கொளுத்தும் கோடை மாதங்களில் குளிர்ச்சியாக இருப்பதைப் பற்றி பலர் சிந்திக்கத் தொடங்குகின்றனர். அதற்காக மக்கள் தேர்ந்தெடுக்கும் பொருட்களில் ஒன்று இந்த ஏர் கண்டிஷனர்கள். எனவே ஏசி வாங்க விரும்புவோர், அதனை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம். இந்தப் பதிவில் அது குறித்து பார்ப்போம்.
ஏசி வாங்குவதற்கு முன், சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகையான ஏர் கண்டிஷனர்களை ஆராய்ச்சி செய்வது முக்கியம். மேலும், நீங்கள் குளிர்விக்க விரும்பும் அறையின் அளவைக் கவனியுங்கள் மற்றும் மின்சார சேமிப்புக்கு உதவும் வகையில் சரியான டன் ஏசிகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

அறையின் அளவை ஆராய்தல்: சிறிய அளவிலான (சுமார் 150 சதுர அடி வரை) அறைக்கு 1 டன் திறன் கொண்ட ஏசி போதுமானது. நடுத்தர அளவிலான (150 முதல் 300 சதுர அடி) அறைகளுக்கு, 1 முதல் 1.5 டன் ஏசி யூனிட்டைத் தேர்வு செய்யவும். பெரிய அளவிலான (300 முதல் 550 சதுர அடி) அறைகளுக்கு 1.5 முதல் 2.5 டன் கொண்ட ஏசி தேவைப்படலாம். 550 சதுர அடிக்கு மேல் உள்ள அறைகளுக்கு, அதன் உயரத்தைப் பொறுத்து 2.5 டன் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட ஏசி யூனிட் தேவைப்படலாம்.
பட்ஜெட் அமைக்கவும்: ஏர் கண்டிஷனர்கள் பலவிதமான விலைகளில் வருகின்றன, எனவே உங்கள் தேடலைத் தொடங்குவதற்கு முன் பட்ஜெட்டை அமைக்க வேண்டியது அவசியம். விலை குறைவாக உள்ள ஏசிகள் சில நேரங்களில் உங்களது மின்சார கட்டணத்தை அதிகரிக்கலாம். எனவே உங்களது பட்ஜெட்டில் உள்ள நல்ல ஏசியை தேர்ந்தெடுப்பது பிற்காலத்தில் ஏற்படும் பராமரிப்பு செலவுகளைக் குறைக்க உதவும்.
மற்ற பிராண்டுகளை ஆராய வேண்டும்: பழைய மாடல் ஏசிகள் மற்றும் புதிய மாடல் ஏசிகள் அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சான்றாக 5 ஸ்டார் ஏசி-களை எடுத்துக் கொள்ளலாம். இவை அதிக மின்சார பயன்பாட்டைத் தடுக்கிறது. மேலும் SEER ரேட்டிங்ஸ், ஆற்றல் திறன் போன்ற கூடுதல் அம்சங்களையும் பார்க்கவும். வெவ்வேறு பிராண்டுகள் மற்றும் மாடல்களின் நம்பகத்தன்மை குறித்து அதன் வாடிக்கையாளர் எழுதிய ரிவியூகளைப் படிக்கவும்.
எங்கு வாங்கலாம்: நீங்கள் அருகில் உள்ள கடைகளிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஏர் கண்டிஷனர்களை வாங்கலாம். ஆனால் அதற்கு முன் விலை மற்றும் சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுப்பது நல்லது. அதன் பிறகு உங்களுக்கு ஏற்ற இடத்தில், நீங்கள் ஏசியை வாங்கலாம். வாங்கிய பிறகு உங்களது அறையில் பொருத்த AC டெக்னீசியன்களை அணுகலாம்.
பராமரிப்பு: உங்கள் ஏர் கண்டிஷனரை வாங்கி பொருத்தியவுடன், அதைத் திறம்பட இயங்க வைக்க சரியான பராமரிப்பு அவசியம். வாரம் ஒருமுறை, ஏர் பில்டர்களை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் யூனிட்டைச் சுற்றி சரியான காற்றோட்டத்தை உறுதி செய்யவும். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து AC டெக்னீசியன்களைக் கொண்டு வருடாந்திர பராமரிப்பை செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications