இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதித்யா பிர்லா குழுமத்தின் சிமெண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட், தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் பெரும் பகுதியில் வர்த்தகம் செய்யும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை வாங்கியது இத்துறை முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதை தொடர்ந்து கூடுதலாகப் பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதானி சிமெண்ட்ஸ் நிறுவனத்தை வளர்ச்சிக்குப் போட்டியாக அதித்யா பிர்லா குழுமம் அடுத்தடுத்து சிமெண்ட் நிறுவனங்களை வாங்குகிறது.
இந்த நிலையில் அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர்கள் மற்றும் இணை நிறுவனங்களிடம் இருந்து 10,13,91,231 பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தில் 28.07.2024 அன்று கையெழுத்திட்டுள்ளது. இந்த 10.13 கோடி பங்குகளை ஒரு பங்கிற்கு ரூ.390 என மொத்தம் ரூ.3954 கோடி மதிப்பீட்டில் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்குகிறது.

கடந்த ஜூன் மாதம், அல்ட்ராடெக் நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 7,05,64,656 பங்குகளைப் பங்கு ஒன்றுக்கு ரூ.268 என வாங்கியது. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22.77% பங்குகளை ஆதித்யா பிர்லா குழுமம் கைப்பற்றியது. தற்போதைய பங்கு வாங்கும் ஒப்பந்தம் மூலம் அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு இந்தியா சிமெண்ட்ஸில் 55.49% பங்குகளைப் பெற உள்ளது. இதன் வாயிலாக இனி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக மாற உள்ளது.
2ஆம் முறை பங்கு கைப்பற்றல் நிறைவு பெறும் வரை நிறுவனத்தின் மேலாண்மையில் எந்த மாற்றமும் இருக்காது என இந்தியா சிமெண்ட்ஸ் தனது பங்குச்சந்தை அறிக்கை தாக்கலில் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் மாபெரும் சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலையை இந்தியா சிமெண்ட்ஸ் வைத்துள்ளது, தற்போது இதை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் கைப்பற்ற உள்ளது.
இதுகுறித்து அல்ட்ராடெக் நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் "முதல் முறை பங்கு விற்பனை ஒப்பந்தத்திற்குப் பின்பு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள தங்கள் பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய விரும்புவதாக ப்ரோமோட்டர் குழு எங்களை அணுகியது. அதன்படி அவர்களின் பங்குகளை வாங்க நாங்கள் முடிவு செய்தோம்" என்று தெரிவித்துள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் குழு என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் தலைமையிலானது.
தமிழகத்தில் சுண்ணாம்பு கல் கிடைப்பது குறைவாக இருப்பதால், புதிய ஒருங்கிணைந்த தொழிற்சாலைகள் அமைப்பதில் பிரச்சனை உள்ளன. தமிழகத்தில் உள்ள நிறுவனத்தின் கடைசி ஒருங்கிணைந்த தொழிற்சாலையை 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கையகப்படுத்தியது.
ஜூன் மாத துவக்கத்தில் 184 ரூபாயாக இருந்த இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளின் விலை, 372.00 ரூபாயாக வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடியும் போது உயர்ந்தது. தற்போது 2வது பங்கு விற்பனை ஒப்பந்த கைப்பற்றல் வாயிலாக இதன் விலை 500 ரூபாய் வரையில் உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications