ஆதித்யா பிர்லா குரூப் கம்பெனியான அல்ட்ராடெக் சிமெண்ட் இந்தியா சிமெண்ட்ஸிடமிருந்து ரூ.315 கோடிக்கு ஒரு அரவை ஆலையை விலைக்கு வாங்கியுள்ளது. தனது இரண்டு யூனிட்களை விரிவுபடுத்துவதற்காக அல்ட்ராடெக் சிமெண்ட் கூடுதலாக ரூ.504 கோடியை முதலீடு செய்துள்ளது.
அல்ட்ராடெக் சிமெண்ட்டின் நிர்வாக குழு ஆண்டுக்கு 1.1 மில்லியன் டன் திறன் கொண்ட அரவை ஆலையை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள பார்லி ரயில்வே சைடிங்கில் இந்த ஆலை அமைந்துள்ளது.

இதற்காக இந்தியா சிமெண்ட்ஸிடம் சொத்து வாங்கும் ஒப்பந்தத்தை அல்ட்ராடெக் சிமெண்ட் செய்துள்ளது. இந்த ஆலையின் மூலம் கம்பெனியின் உற்பத்தி திறனை வேகமாக அதிகரிக்க உதவும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதுபற்றி இந்தியா சிமெண்ட்ஸ் தரப்பில் கூறுகையில், ரூ.315 கோடியில் ரூ.307 கோடி விரைவில் பெற உள்ளது. மீதம் ரூ.8 கோடி அடுத்த 9 மாதங்களுக்குள் பெற உள்ளோம். விற்கப்பட்ட ஆலையானது 2023 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் ரூ.250.66 கோடி விற்றுமுதலை கொண்டு உள்ளது.
பார்லியில் ஆண்டுக்கு 1.2 மில்லியன் டன் அரவைத் திறன் கொண்ட ஆலையை ரூ.166.4 கோடிக்கு விரிவுபடுத்தப்படும். மகாராஷ்டிராவின் துலேயில் ரூ.338 கோடி செலவில் 1.8 மில்லியன் டன் அரவை மில் நிறுவப்படும் என்று அல்ட்ராடெக் கூறியுள்ளது.
எதிர்கால வளர்ச்சிக்காக இந்த விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026க்குள் இந்த விரிவாக்கம் முடிவடையும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் தென்னகத்தில் ஆண்டுக்கு 13 மில்லியன் டன்கள் அரவை திறன் கொண்ட ஆலையையும், ராஜஸ்தானில் 1.8 மில்லியன் டன் அரவை திறன் கொண்ட ஆலையையும் வைத்திருக்கும். பனஸ்வாராவில் 1.2 மில்லியன் டன் கிளிங்கர், 1.8 மில்லியன் டன் சுண்ணாம்பு சுரங்கத்தில் உற்பத்தி தளமும் உள்ளது.
இதனிடையே அல்ட்ராடெக் அல்ட்ராடெக் நாத்ட்வாரா மற்றும் அதன் துணை நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒப்புதலை அதன் போர்டில் பெற்றுள்ளது. 2023 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் அதன் செயல்பாடுகள் தொடங்கும்.
இந்த திட்டத்தின் மூலமாக நாத்ட்வாரா யூனிட்டை முழுவதுமாக ஒருங்கிணைத்து அதன் அமைப்பு, செயலாக்கத்தை எளிமைப்படுத்த அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications