சென்னை: அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் லாபமானது 32% சதவிகிதமாக குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. 2022ம் ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 2023ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்த லாபம் குறைந்திருக்கிறது.
ஆதித்யா பிர்லா குழுவின் முதன்மையான நிறுவனமாக உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் தரம் ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் சிமெண்ட்டின் தரத்திற்கு இணையானதாக இருக்கிறது. அதேபோல இந்நிறுவனம் சாம்பல் சிமென்ட், ரெடி மிக்ஸ் கான்கிரீட் (ஆர்எம்சி) மற்றும் வெள்ளை சிமெண்ட் என மூன்று வகையான சிமெண்ட்டை உற்பத்தி செய்கிறது.

சீனாவை தவிர்த்துவிட்டு பார்த்தால் உலகின் மூன்றாவது மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக அல்ட்ராடெக் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 85க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த நிறுவனத்திற்கு சொந்தாக 185க்கும் அதிகமான ரெடி மிக்ஸ் கான்கிரீட் (RMC) ஆலைகள் இருக்கின்றன. இது மட்டுமல்லாது 20230 ஆண்டுக்குள் தங்கள் நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை 25 சதவிகிதம் குறைப்பதற்கு உறுதி பூண்டிருக்கிறது. இது படிபடியாக 2050ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கர்பன் உமிழ்வை சாத்தியமாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் இந்நிறுவனத்தின் சமூக பொறுப்பு பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் வளர்ச்சி வீழ்ச்சி ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த பெரிய நிறுவனத்தை சார்ந்து ஏராளமான சிறுகுறு நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டின் லாப கணக்கு வெளியாகியுள்ளது. இந்த கணக்கின்படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லாபம் குறைந்திருக்கிறது. அதாவது 2022ம் ஆண்டு நான்காவது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.2,460.5 கோடியாக இருந்தது.
ஆனால் 2023ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இது ரூ.1,666 கோடியாக குறைந்துள்ளது. ஏறத்தாழ 32.3 சதவிகிதம் அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லாபம் குறைந்திருக்கிறது. ஆனால் இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் ரூ.15,557 கோடியாக இருந்த விற்பனை இந்த ஆண்டு ரூ.18,436 கோடியாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஆண்டு கணக்காக பார்த்தால் 2022ல் ரூ.51,708 கோடியும், 2023ம் ஆண்டில் ரூ.62,338 கோடியாக அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆண்டை விடவும் விற்பனை 20.6% அதிகரித்திருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு லாபம் ரூ.5,667 கோடி வந்தது. இந்த ஆண்டு இது 10.6 சதவிகிதம் குறைந்து 5,064 கோடியாக வந்திருக்கிறது. பொதுவாக விற்பனை அதிகரித்தால் லாபமும் அதிகரிக்கும் என்பதுதான் விதி. ஆனால் 10.6 சதவிகிதிம் வரை லாபம் குறைந்திருப்பது அனைவரிடையேயும் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு நிறுவனம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றின் காரணமாகதான் லாபம் குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சிமெண்ட் உற்பத்திக்கு தேவைப்படும் ஆற்றலை உருவாக்க அதிக செலவு செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது நிலக்கரியின் விலை முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு 18 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல ஃப்ளை ஆஷ், ஸ்லாக் மற்றும் ஜிப்சம் போன்ற பொருட்களின் விலையும் 9 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கிறது. ஆக இந்த ஒட்டுமொத்த காரணங்களும்தான் விற்பனை அதிகரித்த போதிலும் லாபம் குறைந்ததற்கான காரணம் என்று நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications