டெல்லி: சீனாவின் கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் ஒரு புறம் உயிர்பலியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மறுபுறம் சீனா மட்டும் அல்லாமல், மற்ற நாடுகளின் வர்த்தகமும் முடங்கி போயுள்ளது.
இந்த நிலையில் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கு இரும்பு துறை பாதிகப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பல தொழில் துறைகளில் முன்னணி வகிக்கும் சீனா, அலாய் உற்பத்தியிலும் சீனா தான் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இது இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு
ஆனால் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு இறக்குமதியும் சரி, ஏற்றுமதியும் சரி பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த பிரச்சனையினால் சர்வதேச அளவில் ஸ்டீல் துறை அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பிரச்சனையை எதிர்கொள்ளும். ஆக இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்தையை கைபற்ற கணிசமான வாய்ப்பு
மேலும் இரும்பு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தும்போது, சர்வதேச சந்தையினை மேம்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார். ஏனெனில் இரும்பு துறையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா தான் உள்ளது. ஆக இரும்பு துறையில் அதிக கவனம் செலுத்தினால், அது சர்வதேச அளவில் இரும்பு சந்தையை கணிசமான அளவு கைப்பற்ற கைகொடுக்கும் என்றும் பிரதான் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு
இந்தியா ஆண்டுக்கு 106 மில்லியன் டன் அளவில் இரும்பு உற்பத்தி செய்கிறது. எனினும் சீனாவுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி மிக அதிகம். சீனாவில் ஆண்டுக்கு 928.3 மில்லியன் டன் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் தலைவிரித்தாடி வரும் கொரோனாவால் இதுவரை சுமார் 1,800 பேருக்கு மேல் பலியாகியுள்ள நிலையில், சீனாவின் மொத்த வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இது இந்தியாவுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இது என்றும் பிரதான் தெரிவித்துள்ளார்.
உற்பத்தியை அதிகரிக்கலாம்
உலகின் சில சந்தைகள் அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது அதன் நேர்மறையான பிரதிபலிப்பு, வேறு சில சந்தைகளில் அதன் தாக்கம் உணரப்படுகிறது. இது இயற்கை தான். அது பெரிய மற்றும் சிறிய அளவிலான இரும்பு உற்பத்தி செய்யும் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு மதிப்பு சேர்த்த பிறகு, மீண்டும் மதிப்பு சேர்த்த பிறகு இந்தியாவுக்கு முடிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. ஆக இந்தியா இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி இரும்பு உற்பத்தியை அதிகரிக்கலாம்.
தரமான பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்
இந்தியா தொழில் நுட்ப ரீதியாக மிக திறமையான நாடு. இங்கு ஏராளமான மனித வளம், உள்நாட்டு சந்தை, நிறைய மூலப் பொருட்கள் உள்ளன. ஆக இந்த அனைத்து காரணிகளையும் ஒருங்கிணைத்து நாம் தன்னிறைவு பெற வேண்டும். மேலு ஒரு புதிய மாதிரியை உருவாக்க வேண்டும். நல்ல தரமான பொருட்களை தயாரிக்க வேண்டும், அதை ஏற்றுமதியும் செய்ய வேண்டும் என்றும் பிரதான் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications