மீண்டும் பணிநீக்கம்.. Unacademy அறிவிப்பால் ஊழியர்கள் கலக்கம்..!

இந்திய டெக் நிறுவனங்களில் அதிகப்படியான பணிநீக்கம் இல்லையென்றாலும் EDtech நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் அதிகப்படியான பணிநீக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்த Unacademy நிறுவனம் 12 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி முறை மக்கள் மத்தியில் அதிகளவிலான டிமாண்ட் இருந்த காரணத்தால் இத்துறையில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்தது, இதனால் பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட ஆயிர கணக்கில் ஊழியர்களை சேர்க்க துவங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத காலத்தில் இது சிறப்பாக இருந்தாலும் கொரோனாவுக்கு பின்பு படிப்படியாக இதன் தேவை குறைந்தது மட்டும் அல்லாமல் வருமானம், வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியாமல் போனது.

இதனால் எட்டெக் நிறுவனங்கள் ஏறிய வேகத்தில் இறங்கி பெரும் பாதிப்பை எதிர்கொள்ள துவங்கியதால் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்த இத்துறையில் அதிகப்படியான பணிநீக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Unacademy நிர்வாகம்

Unacademy நிர்வாகம்

Unacademy நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோ-வில் நிறுவனம் அடுத்த சுற்று பணிநீக்கத்தை கையில் எடுக்க உள்ளதாகவும், இந்த சுற்றில் தற்போது பணியில் இருக்கும் மொத்த ஊழியர்களில் 12 சதவீத பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் Unacademy நிறுவனத்தின் சிஇஓ கவ்ரவ் முஞ்சால் தெரிவித்துள்ளார்.

4வது முறை பணிநீக்கம்

4வது முறை பணிநீக்கம்

Unacademy நிறுவனம் ஏப்ரல் 2022ல் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த போது இனி நிறுவனத்தில் பணிநீக்கம் இருக்காது என சிஇஓ கவ்ரவ் அறிவித்தார். ஆனால் நவம்பர் மாதம் 350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, ஜனவரி 2023ல் தனது Relevel நிறுவனத்தில் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

கவ்ரவ் முஞ்சால்

கவ்ரவ் முஞ்சால்

கவ்ரவ் முஞ்சால் அனுப்பிய மெமோவில், நிறுவனத்தின் அடிப்படை வர்த்தகம் லாபகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து விதிமான நடவடிக்கைகளையும் சரியான திசையில் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் வருவாய் இலக்கை அடைய வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

டீம் லீடர்

டீம் லீடர்

இது மட்டும் அல்லாமல் நிறுவனத்தில் இருக்கும் அனைத்து மேனேஜர், டீம் லீடர்கள் அனைவரும் தங்களின் டீம் சைஸ்-ஐ நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து அணிகளும் சரியான காஸ்ட் ஸ்டக்சர் கீழ் இயங்கும், வர்த்தகத்திற்கு தேவையான திறமைகளை கொண்ட அணியை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

12 சதவீத பணிநீக்கம்

12 சதவீத பணிநீக்கம்

இந்த 12 சதவீத பணிநீக்கத்தின் கீழ் வெளியேறும் அனைத்து ஊழியர்களும் அவர்களின் நோட்டீஸ் ப்ரீயட் மற்றும் ஒரு மாத சம்பளத்தை severance pay ஆக அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதேபோல் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றியவர்களுக்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட பங்குகளை விற்பனை செய்ய வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

CodeChef நிறுவனம்

CodeChef நிறுவனம்

Unacademy நிறுவனம் 2020 ஆம் ஆண்டு கைப்பற்றிய CodeChef நிறுவனத்தை தனியாக பிரித்து அடுத்த 12- 18 மாதங்களுக்கு இயங்கும் அளவுக்கு போதுமான பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேவும் Unacademy, CodeChef நிறுவனத்தில் தொடர்ந்து 30 சதவீத பங்குகளை கொண்டு உள்ளது.

இதன் மூலம் CodeChef நிறுவனத்திற்கு அடுத்த 18 மாதம் சோதனை காலம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+