ChatGPT வருகைக்கு முன்பே அனைத்து பெரிய டெக் நிறுவனங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முக்கியமான பணிகளுக்கு பயன்படுத்தி வந்தாலும், சிறிய மற்றும் நடுத்தர டெக் நிறுவனங்களுக்கு இத எட்டா கனியாகவே இருந்தது. ஆனால் கடந்த சில வருடத்தில் மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சி சின்ன செயலியில் கூட AI ஆதிக்கும் வந்துள்ளது.
இந்த நிலையில் OpenAI நிறுவனத்தின் ChatGPT அறிமுகம் ஒட்டுமொத்த டெக் துறையை வியப்பில் ஆழ்த்தியது மட்டும் அல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ChatGPT மனிதர்களுக்கு இணையாக யோசிக்கும் திறன் கொண்டு இருக்கும் வேளையில் பல கோடி மக்களின் பணிகளை இது திருடி விடும் என்ற பேச்சு நிலவி வருகிறது. இதற்கிடையில் தான் அமெரிக்க கல்லூரி பேராசிரியர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் UC பெர்க்லி பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் சையின்ஸ் பேராசிரியரும், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பிரிவின் முன்னணி நிபுணருமான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், சரிபார்க்கப்படாத AI வளர்ச்சி பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
"செயற்கை நுண்ணறிவு: ஒரு நவீன அணுகுமுறை" என்ற AI துறையில் standard text அதாவது அஸ்திவாரத்தை உருவாக்கியதில் இணை ஆசிரியராக இருந்த ரஸ்ஸல்-ன் எச்சரிக்கை பல கோடி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சரிபார்க்கப்படாத AI வளர்ச்சி என்பது "Chernobyl for AI" போன்றது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பேரழிவு-க்கு இது வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் GPT-4 அறிமுகத்தின் போது இதன் திறனை கண்டு வியந்தவர்களை காட்டிலும், அதை கண்டு அஞ்சியவர்கள் அதிகம். இதன் வாயிலாக GPT-4 மூலம் மக்களுக்கும் சமுகத்திற்கும் ஏற்படும் நன்மைகளை ஆய்வு செய்து முடிவுக்கு வரும் நோக்கில் அடுத்த 6 மாதத்திற்கு GPT-4 தொழில்நுட்பத்தின் கீழ் எவ்விதமான டெவலப்மென்ட் செய்ய கூடாது என ஒரு பெட்டிஷன் டெக் வல்லுனர்கள் மத்தியில் கையெழுத்தானது.

இந்த முக்கியமான பெட்டிஷனில் டெஸ்லா எலான் மஸ்க், ஆப்பிள் துணை நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வாஸ்னியாக் கையெழுத்திட்டனர். இதில் ஸ்டூவர்ட் ரஸ்ஸல்-ம் கையெழுத்திட்டார் என்பது முக்கிய தகவல், ஸ்டூவர்ட் ரஸ்ஸல் AI தொழில்நுட்பத்தை தடை செய்ய கூறவில்லை பாதுகாப்பான டெக் டெவலப்மென்ட்-ஐ உறுதி செய்வதற்கான நியாயமான வழிகாட்டுதல்கள் கட்டாயம் தேவை என்பதை வழியுறுத்துகிறார்.


Click it and Unblock the Notifications