இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் 42,272 கோடி ரூபாய் யாராலும் உரிமை கோரப்படாமல் தேங்கி கிடப்பது தெரிய வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத சேமிப்பு கணக்குகளில் உள்ள பணம் மற்றும் முதிர்வடைந்து 10 ஆண்டுகளாக கோரப்படாத வைப்புத்தொகை ஆகியவை கோரப்படாத வைப்புத் தொகைகள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
20 ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு: இந்தியாவில் உள்ள பொது மற்றும் தனியார் வங்கிகளில் 2018 -19 ஆம் நிதி ஆண்டின் இறுதியில் கோரப்படாத வைப்புத் தொகைகளின் அளவு 17,784 கோடி ரூபாய். இதுவே 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 42,272 கோடியாக உயர்ந்தது என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவில் தெரியவந்துள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணத்தின் அடிப்படையில் பார்த்தால் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இந்தியாவில் வங்கிகளில் கோரப்படாமல் விடப்பட்ட தொகைகளின் அளவு 535.42 கோடி ரூபாயாக இருந்தது அதுவே 2002 ஆம் ஆண்டு 680.05 கோடியாக உயர்ந்தது.
1999 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக செயல்பட்டது பாரத ஸ்டேட் வங்கி. அப்போது பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் 144.26 கோடி ரூபாய் யாராலும் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டு இருந்தது. இதுவே 2013 ஆம் ஆண்டு 1469. 99 கோடி ரூபாய் என உயர்ந்தது .
2018 இல் இது 2016.33 கோடி என்றும் 2020 ஆம் ஆண்டில் 3577.56 கோடி எனவும் 2023 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 8086 கோடி ரூபாய் எனவும் உயர்வு கண்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 20 ஆண்டுகளில் இவ்வாறு உரிமை கோரப்படாத தொகையின் எண்ணிக்கையானது 56 மடங்கு அதிகரித்துள்ளது.
பொதுத்துறை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடந்த 20 ஆண்டுகளில் உரிமை கோரப்படாத தொகையின் அளவானது 90 மடங்கு அதிகரித்துள்ளது.
ஏன் உரிமை கோரப்படுவதில்லை: வங்கி கணக்கில் உள்ள தொகை மற்றும் வைப்பு தொகைகள் உரிமை கோரப்படாமல் உள்ளன என்பதற்கு பல்வேறு காரணங்களை இந்திய ரிசர்வ் வங்கி முன்வைக்கிறது .குறிப்பாக கணக்கு உரிமையாளர் இறந்து விடுவது அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு ஊருக்கு செல்வது அல்லது வெளிநாடுகளில் செட்டிலாவது அல்லது குடும்ப பிரச்சினை காரணமாகவோ அல்லது சட்ட ரீதியான சிக்கல்கள் காரணமாகவோ கணக்கில் உள்ள தொகையை உரிமை கூறாமல் இருப்பது.
கணக்கு உரிமையாளர் இறந்துவிடும் பட்சத்தில் அவர்களது வாரிசுகளோ அல்லது அவர்களால் நியமனம் செய்யப்பட்ட நாமினிகளோ தொகையை பெறுவதற்கு பெரும்பாலும் முன் வருவதில்லை அல்லது அது பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை.
இதுபோல வங்கிகளில் உள்ள உரிமம் கோரப்படாத தொகைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கியானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளும் அவர்களது இணையதளத்தில் இதுபோன்ற உரிமம் கோரப்படாத கணக்குகளின் விவரங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.
அதுமட்டுமின்றி ரிசர்வ் வங்கியானது தி டெபாசிட்டர் எஜுகேஷன் அண்ட் அவேர்னஸ் ஃபண்ட் என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் அவரது வங்கி கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது அவர் ஏதேனும் நிலையான வைப்புத் தொகை போன்றவற்றை வங்கியில் வைத்துள்ளாரா என்பது குறித்து அவரது வாரிசுதாரர்கள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வங்கியில் அவரது இறப்பு குறித்த சான்றிதழ்களை சமர்ப்பித்து உரிய முறையில் அவர்களின் கணக்கில் உள்ள பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications