மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்தி தீபாவளி பரிசு வழங்கிய அரசு தற்போது மேலும் ஒரு முக்கியமான பரிசினை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர் . இவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக அரசு CGHS எனப்படும் Central Government Health Scheme என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு திட்டம் தான் இது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த CGHS இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் செயல்படுகின்றன. அதில் அரசு ஊழியர்களும் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

கேஷ் லெஸ் முறையிலும் ரீ இம்பர்ஸ்மென்ட் எனப்படும் முதலில் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு பின்னர் அதனை கிளைம் செய்து கொள்ளும் வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது . கிட்டதட்ட இது ஒரு மருத்துவ காப்பீடு திட்டம் போலவே இயங்குகிறது. ஊழியர்களின் சம்பளத் தொகையிலிருந்து ஒரு கணிசமான தொகை இந்த திட்டத்திற்கு பங்களிப்பு செய்யப்படுகிறது . மருத்துவ தேவைகளின் போது இவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் .
இந்த திட்டத்தில் முக்கியமான ஒரு மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அக்டோபர் 13-ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது . இந்த திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 2000 மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு GHS திட்டம் மருத்துவ செலவுகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது என்றாலும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகையை அரசு வழங்கும் என்பது 15 ஆண்டுகளாக மாற்றப்படாமலேயே இருக்கிறது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மருத்துவ செலவுடன் ஒப்பிடும்போது தற்போது அது பல மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால் அரசாங்கம் இதன் கீழ் ஒவ்வொரு சிகிச்சைக்கும் வழங்கக்கூடிய காப்பீடு கட்டணம் என்பது 15 ஆண்டுகளாக மாறாமலேயே இருக்கிறது. இதன் காரணமாக ஊழியர்களும் மருத்துவமனை நிர்வாகங்களும் பெரும் சிக்கல்களை சந்தித்தன.
ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் சிஜிஹெச்எஸ்-இல் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் தங்களுக்கு கேஷ் லெஸ் ட்ரீட்மென்ட் தர மறுக்கின்றனர் என புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மருத்துவ செலவுகளுக்கு தங்கள் கையில் இருக்கும் பணத்தை கொண்டு செலவு செய்து விட்டு பின்னர் அந்த பணத்தை திரும்ப கோரி விண்ணப்பம் செய்து பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் தான் தற்போது நிலவுகிறது.
மருத்துவமனைகளை பொருத்தவரை ஒவ்வொரு குறிப்பிட்ட சிகிச்சைக்கும் அரசு வழங்கக்கூடிய தொகை என்பது மிகக் குறைவாக இருக்கிறது. மேலும் எங்களுக்கு சரியான நேரத்தில் அரசிடமிருந்து அந்த பணம் வழங்குவதில்லை என்பதாலேயே கேஷ் லெஸ் சர்வீஸ் வழங்குவதற்கு தயங்குவதாக தெரிவிக்கின்றன. இந்த சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கூட்டமைப்பு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தது.
மருத்துவமனைகள் கேஷ் லெஸ் சிகிச்சை வழங்க வேண்டும் , பல்வேறு சிகிச்சைகளுக்கு வழங்கக்கூடிய கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தது . இந்த சூழலில் மத்திய அரசு சுமார் 2000 மருத்துவ சிகிச்சைகளுக்கான கட்டணங்களை மாற்றி அமைத்திருக்கிறது. முதல் நிலை , இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் என்றும் மருத்துவமனையின் தரம் ஆகியவற்றை பொருத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.
எனவே இனி மருத்துவமனைகள் எந்த ஒரு தயக்கமும் இன்றி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினருக்கு கேஷ் லெஸ் சிகிச்சை அளிக்க முன்வரும், அரசு ஊழியர்களுக்கும் தங்கள் பாக்கெட்டில் இருந்து மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications