சென்னை: இந்தியாவில் முன்னணி NBFC நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ், அதன் பிரபலமான இன்ஸ்டா EMI கார்டு மூலம் சமீபத்தில் ஒரு பிரச்னையை எதிர்கொண்டது. ஆனால் தற்போது அதிலிருந்து மீண்டும் வந்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா EMI கார்டு என்றால் என்ன?: பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா EMI கார்டு என்பது டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் ஒரு கார்டு ஆகும். இதைக் கொண்டு நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு மாதாந்திர தவணைத் தொகையாக திருப்பி செலுத்த வழி செய்கிறது.

சிலருக்கு கேட்ஜெட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் வாங்குவதற்கு பட்ஜெட் இடிக்கலாம். நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, புதிய பிராண்டுகளில் கேட்ஜெட், ஹோம் அப்ளையன்ஸ்கள் போன்றவைகள் மக்களை கவரும் விதமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பொருட்களை ஒரே நேரத்தில் முழுத் தொகையையும் செலுத்தி வாங்க முடியாமல் இருக்கும் பட்சத்தில், நீங்கள் இந்த இன்ஸ்டா EMI கார்டைப் பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். இந்த கார்டைப் பயன்படுத்தி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டோர்களில், நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு EMI மூலம் பணம் செலுத்த உபயோகிக்கலாம்.
இந்த இன்ஸ்டா EMI கார்டுகள் மூலம் ரூ. 2 லட்சம் வரைக்குமான பிரீ-அப்ரூவ்டு கிரெடிட் லிமிட் கிடைக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக்கொண்டு அந்த ப்ராடக்டுகளுக்கான தவணைத் தொகையை பிற்பாடு, நீங்கள் செலுத்தலாம்.
பஜாஜ் ஃபைனான்ஸ்-இன் இன்ஸ்டா EMI கார்டு மற்றும் அதன் இ-காமர்ஸ் தளமான eCOM மூலம் புதிய கடன்கள் மற்றும் EMI கார்டுகள் வழங்கப்படுவது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டி, EMI கார்டுகள் வழங்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
டிஜிட்டல் முறையில் கடன் வழங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் என்ன?: கடந்த ஆண்டு டிஜிட்டல் முறையில் கடன் வழங்குபவர்களுக்கான சில வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி கடன் வழங்குபவர்கள் KFS ஆவணங்களைக், கடன் பெறுபவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அதாவது KFS ஆவணம் என்பது அந்த நிதி நிறுவனத்தில் பெரும் கடன்களுக்கு உள்ள வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணம், கடனைத் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் பிற கட்டணங்கள் போன்ற அத்தியாவசிய கடன் விவரங்களை சுருக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு ஆவணமாகும்.
இதன் மூலம் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், தாங்கள் கடன் விஷயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு தொகையை செலுத்த வேண்டும் என்பது போன்ற விவரங்களைத் தெளிவாக அறிந்த பின்னர் கடன் பெற முடியும்.
இந்த ஆவணங்கள் எந்த ஒரு கடன் வழங்குநருக்கும் முக்கியமான ஒன்று. ஆனால் பஜாஜ் ஃபைனான்ஸ் eCOM மற்றும் இன்ஸ்டா EMI கார்டுகள் மூலம் வழங்கப்பட்ட கடன்களுக்கு KFS வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் வழங்கும் பிற டிஜிட்டல் கடன்களுக்கு வழங்கும் KFS ஆவணங்களிலும் சிக்கல்கள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கண்டறிந்தது. இதுபோன்ற ஆவணங்களில் துல்லியமான தகவல்கள் இல்லாமல் இருப்பது கடன் பெறுபவரைக் குழப்பமடையச் செய்யலாம்.
இதனால் நவம்பர் 17ஆம் தேதி 2023 அன்று பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், புதிய EMI கார்டுகள் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. ஆனால் நேற்று மே 2ஆம் தேதி ரிசர்வ் வங்கி, இன்ஸ்டா EMI கார்டு மற்றும் eCOM தளத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கியதாக அறிவித்துள்ளது.
கட்டுப்பாடு விதித்ததற்குப் பின்பு பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், தக்க விதிமுறைகளை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதால், இந்த முடிவை ஆர்பிஐ தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications