டெபிட் கார்டுகள் அன்றாட பணப்பரிவர்த்தனைக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஷாப்பிங் செய்வதற்கு, பணம் எடுப்பதற்கு மற்றும் யுபிஐ மூலம் பணம் செலுத்துவதற்கு எனப் பலவற்றுக்கும் ஏடிஎம் கார்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கைத் திறக்கும் போதே ஏடிஎம் கார்டைப் பெறுகின்றனர். ஆனால் பலருக்கு அதன் பயன்பாடுடன் தொடர்புடைய பல்வேறு கட்டணங்கள் குறித்து தெரியாமல் உள்ளது. இந்த கட்டணங்கள் வங்கியை பொருத்து மாறுபடலாம். இந்த கட்டுரையில் ஏடிஎம் கார்டுகளுக்கு வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் குறித்து பார்ப்போம்.
வருடாந்திர பராமரிப்பு கட்டணம்: உங்கள் டெபிட் கார்டை பராமரிப்பதற்கு வங்கிகள் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்த கட்டணம் பொதுவாக 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை இருக்கலாம். மேலும் இந்தத் தொகை வெவ்வேறு வங்கிகளுக்கும் தகுந்தாற் போல் மாறுபடும்.

கார்டு ரீப்ளேஸ்மென்ட் சார்ஜ்: உங்கள் ஏடிஎம் கார்டு சேதமடைந்தாலோ அல்லது தொலைந்து விட்டாலோ அதை மாற்ற வேண்டியிருக்கும். அப்படி மாற்றுவதற்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றன. சில வங்கிகள் ஏடிஎம் கார்டு சேதம் அடைந்திருந்தால் கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றன. ஆனால் ஏடிஎம் கார்டுகளை தொலைத்தால் வேறு கார்டு வழங்குவதற்கு பொதுவாக 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவும் வங்கிகளைப் பொறுத்து மாறுபடும்.
பின் ரீஜெனரேஷன் கட்டணம்: உங்கள் ஏடிஎம் கார்டின் பின் நம்பரை மறந்து விட்டால் அதை மீண்டும் மாற்றி அமைப்பதற்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. பொதுவாக 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை இருக்கலாம்.
பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்: நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் சொந்த ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்தால் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் ஒரு பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்படலாம். இது வங்கிகளை பொறுத்து மாறுபடும். மேலும் உங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கும் தினசரி வரம்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.
சர்வதேச பரிவர்த்தனை கட்டணங்கள்: வெளிநாடுகளில் உங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்துதல் அல்லது பணம் திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்கு சர்வதேச பரிவர்த்தனை கட்டணங்களை செலுத்த வேண்டும். கட்டணங்கள் வங்கிக்கு வங்கி வேறுபடும் மற்றும் பொதுவாக உள்நாட்டு பரிவர்த்தனை கட்டணங்களை விட அதிகமாக இருக்கும்.
இந்த கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்வது உங்கள் டெபிட் கார்டை திறம்பட நிர்வகிக்க உதவும். அது மட்டுமின்றி தேவையற்ற கட்டணங்களையும் தவிர்க்க உதவும். ஆனால் சரியான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ள உங்கள் வங்கியின் இணையதளத்தை பார்வையிடவும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications