மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பலருக்கும் ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு முதலீட்டிலும் சில செலவுகள் இருக்கும். அந்த செலவுகள் முதலீட்டு திட்டங்களைப் பொறுத்து மாறுபடும். மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளைப் பொறுத்தவரை செலவு விகிதம் (Expense Ratio) என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். இந்தப் பதிவில், அதன் விவரங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Expense Ratio என்றால் என்ன?: உங்கள் முதலீடுகளை நிர்வகிப்பதற்கான கட்டணமாக ஒரு முதலீட்டாளர், ஃபண்ட் ஹவுஸுக்கு செலுத்தும் குறிப்பிட்ட சதவீதத் தொகையை இது குறிக்கிறது. எளிமையாகச் சொல்வதானால், இது மியூச்சுவல் ஃபண்ட்டை இயக்குவதற்கும் நிர்வகிப்பதற்குமான செலவு ஆகும். இந்த செலவு விகிதம் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கும் மாறுபடும்.

உதாரணமாக, 2% செலவின விகிதத்தைக் கொண்ட ஃபண்டில் ரூ.20,000 முதலீடு செய்தால், உங்கள் பணத்தை நிர்வகிக்க ரூ.400 ஃபண்ட் ஹவுஸுக்குச் செலுத்த வேண்டும் என்று அர்த்தம்.
முதலீட்டாளர் செலுத்தும் செலவு விகிதத்தில் மூன்று முக்கிய கட்டணங்கள் அடங்கும்.
நிதி மேலாண்மை கட்டணம் (Management Fee): முதலீட்டுத் திட்டங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற நிதி மேலாண்மை நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் கட்டணம். இது ஆண்டுதோறும் 0.50% முதல் 1% வரை இருக்கும்.
தணிக்கை கட்டணம் (Audit Fee): அனைத்து விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைபிடிப்பதற்காக, மியூச்சுவல் ஃபண்டுகள் அவ்வப்போது தணிக்கை செய்யப்பட வேண்டும். இதற்கான கட்டணத்தை "Audit fee" குறிக்கிறது.
சந்தைப்படுத்தல்/ விநியோகக் கட்டணம் (Marketing/Distribution Fee): மியூச்சுவல் ஃபண்டுகளை சந்தைப்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் மூலம் அவற்றை விநியோகிப்பது ஆகியவற்றிற்கான செலவு. மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பர மற்றும் விநியோக செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.
உதாரணமாக, நீங்கள் ரூ. 2 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஜூன் 24ஆம் தேதி அன்று உங்களுடைய முதலீட்டு தொகை ரூ. 2,00,125 ரூபாயாக வளர்ச்சி அடைகிறது. தற்போது உங்களுடைய செலவு விகிதம் 1.5 சதவீதம் என்றால் கீழ்காணும் ஃபார்முலாவை பயன்படுத்தி நீங்கள் செலவு விகிதத்தை கணக்கிடலாம்.
Expense Ratio = Expense Percentage / 365 * Invested Value = 1.5 / 365 * 2,00,125 = ரூ. 8.22
எனவே, நீங்கள் ஜூன் 24ஆம் தேதி அன்று ரூ. 8.22 செலுத்த வேண்டும். குறைந்த முதலீட்டாளர் செலவு விகிதம் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்வு செய்வது நீண்ட காலத்திற்கு உங்கள் முதலீட்டை அதிகரிக்க உதவும். ஏனெனில், உங்கள் முதலீட்டில் இருந்து குறைந்த தொகை எடுக்கப்படுவதால், மீதமுள்ள லாபம் அதிகமாக இருக்கும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications